நடிகையை பார்க்க 5 நாட்கள் சாலையோரம் படுத்துறங்கிய ரசிகர்; உருகிய ஜீவா ஹீரோயின் (வீடியோ)

ஜீவா நடித்த ‘முகமூடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், தெலுங்கில் இவருக்கென்று தனி மார்கெட் உள்ளது. இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் பூஜாவை நேரில் பார்க்க அவர் வசிக்கும் மும்பைக்கு…

By: Updated: January 18, 2020, 9:43:10 PM

ஜீவா நடித்த ‘முகமூடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், தெலுங்கில் இவருக்கென்று தனி மார்கெட் உள்ளது. இந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தெலுங்கு ரசிகர் ஒருவர் பூஜாவை நேரில் பார்க்க அவர் வசிக்கும் மும்பைக்கு சென்றுள்ளார்.

இது மணிமேகலை பொங்கல் – ரசிகர்களுக்கு ஏன் இந்த பெண்ணை இவ்வளவு பிடிக்குதோ!!

பூஜாவை பார்க்க 5 நாட்களாக காத்திருந்த அவர் சாலையோரம் படுத்து தூங்கியுள்ளார். பாஸ்கர் ராவ் என்கிற அந்த ரசிகர் தனக்காக காத்திருப்பது குறித்து அறிந்த பூஜா அவரை சந்தித்து பேசிய வீடியோவை பூஜா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.


தன்னை பார்க்க மும்பை வரை வந்து 5 நாட்கள் காத்திருந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள பூஜா தன் ரசிகர்கள் இப்படி கஷ்டப்படுவது தனக்கு கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

பட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் – ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)

மேலும், நீங்கள் தெருவில் படுத்து தூங்குவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் உங்களின் அன்பை நான் உணர்கிறேன். நீங்களே என் பலம் என்று தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Fan sleep on pavement to meet actress pooja hegde

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X