இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் உருவான திரைப்படம் 4ஜி. காயத்ரி சுரேஷ், சுரேஷ் மேனன், சதீஷ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தை, இயக்குனர் வெங்கட் பாக்கர் இயக்கியிருந்தார். கடந்த 2016 தொடங்கப்பட்ட இப்படத்தை, திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்திருந்தார். இருப்பினும் சில காரணங்களால் படம் வெளியாகாமல் நான்காண்டுகளாக கிடப்பில் உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க திட்டங்கள் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்
எப்போதும் நட்போடும் நம்பிக்கையோடும் பழகும் ஒரு இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன்…
அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்..
நண்பரின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும் @AVArunPrasath ???? pic.twitter.com/wQvtoYOTTF— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2020
இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் நடந்த சாலை விபத்தில், இயக்குனர் வெங்கட் பாக்கர் மரணம் அடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னூரை சேர்ந்த வெங்கட் இயக்குனராக வேண்டும் என்ற, லட்சியத்துடன் கடினமாக உழைத்தவர். இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர். முதல் படம் வெளியாகாமல் தள்ளிப் போனாலும், எப்போதுமே நம்பிக்கையை கைவிடாத நபராக இருந்தவர். தன்னை சுற்றி இருந்தவர்களுடன் எப்போதும் அன்பாகவும், நட்பாகவும் பழகக்கூடியவர். முதல் படமே ரிலீஸ் ஆகாத நிலையில், உலகை விட்டுச் சென்ற இளம் இயக்குனர் வெங்கட் பாக்கரின் மரணம் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவுக்கு பயந்தா திருவிழா கொண்டாட முடியுமா பாஸ்? ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய கர்நாடகா!
இதுகுறித்து ட்விட்டரில் நடிகர் ஜிவி பிரகாஷ், ”இனிய சகோதரன் என் இயக்குனர் வெங்கட் பாக்கர் சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரமுற்றதாக” தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”