Happy Birthday NTR: ஜூனியர் என்டிஆர் என அழைக்கப்படும், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நந்தமுரி தாரகா ராமராவ், மே 20 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை சிறப்பிக்க, ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள் ரசிகர்கள். மேலும், அவரது பிறந்தநாளில், வரவிருக்கும் முக்கிய வெளியீடுகளில் ஒன்றான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பீரியட் படம், 'ரவுத்ரம் ரணம் ருத்ரம்' (ஆர்.ஆர்.ஆர்) திரைப்படம் ட்விட்டரில் அதிக நேரம் ட்ரெண்டானது.
’நான் கல்யாணம் பண்ணிக்க போற விஷயம் கடைசியா தான் எனக்கு தெரியுது’ – வரலட்சுமி சரத்குமார்
சினிமா குடும்பத்தின் வாரிசான ஜூனியர் என்.டி.ஆர் 1983-ம் ஆண்டு மே 20-ம் தேதி என்.டி.ஆரின் மகனும், நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணாவுக்கு மகனாக பிறந்தார். தாத்தாவை போலவே டோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தேசிய விருது பெற்ற ராமாயணம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஜூனியர் என்.டி.ஆர், ராஜமெளலியின் இயக்கத்தில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான ’ஸ்டூடன்ட் நம்பர் 1’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ஆக்ஷனில் அசத்தி பல படங்களில் நடித்து வந்த அவர், 2017-ல் வெளியான ’ஜெய் லவ குசா’ படத்தில் ராவண மகாராஜ் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.
ஐ.இ. தமிழ் முகநூல் நேரலை : ஆளூர் ஷா நவாஸ் இன்று மாலை 07:00 மணிக்கு நம்முடன் உரையாடுகிறார்
ஜூனியர் என்.டி.ஆர்., அண்ணா, தாரக், யங் டைகர் என பல பெயர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். டோலிவுட் முதல் பாலிவுட் பிரபலங்கள் வரை அவரை வாழ்த்தி வருகின்றனர். அதோடு அவரின் பிறந்தநாளுக்கு 15 மில்லியனுக்கும் அதிகமான ட்வீட்களால் திக்கு முக்காடச் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள்!
அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”