ஆர்.மனோஜ் குமார்
Best Vijay Movies: தற்போதைய தலைமுறையைப் பொறுத்தவரை, விஜய் ஒரு பெரிய சூப்பர் ஸ்டார். ஆனால், 80-களில் பிறந்து, 1990-களில் அவரை திரையில் பார்த்த குழந்தைகளைப் பொறுத்தவரை, அவருடனான தொடர்பு மிகவும் தனிப்பட்டது. நாங்கள் அவருடன் இணைந்தே வளர்ந்தோம். அன்றைய தினம் இளம் பார்வையாளர்களின், பேஷன் சென்ஸ் மற்றும் முக்கிய குணாதிசயங்களை திரையில் விஜய் பிரதிபலித்தார் என்றே சொல்லலாம். அன்பு, நட்பு மற்றும் பிற குணங்களின் அர்த்தம் என்ன என்பதை அவரது திரைப்படங்களின் மூலம் நாங்கள் புரிந்துகொண்டோம்.
1990-களில் இருந்து பெரும்பாலும் ஒரே ஃபார்முலா அடிப்படையிலான திரைப்படங்களில் நடித்தாலும், அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்கு கலைஞர் என்பதும் உண்மை. விஜய் பற்றிய அவதானிப்பை ஆதரிக்கும் திரைப்படங்களின் பட்டியலை இங்கே தருகிறோம்.
விஜய் பிறந்தநாள்: வெற்றிக்கு குடும்ப பலம் மிக முக்கியம்!
கில்லி: இந்த தமிழ் ரீமேக் தெலுங்கு ஹிட்டான் ’ஒக்கடு’ (2003) படத்தை விட சிறப்பாக இருந்தது. படத்தில் தந்தை-மகன் உறவை காமெடி - சீரியஸ்னஸ் கலந்து இயக்குனர் தரணி, கில்லிக்கு கூடுதல் பவரை சேர்த்துள்ளார். அசல் தெலுங்கு பதிப்பு வலுவான தந்தை-மகன் உறவைக் கொண்டிருந்தது. மேலும், விஜய்யின் வாழ்க்கையில் இந்த திரைப்படத்திற்குப் பிறகு நிறைய மாற்றம் ஏற்பட்டது. 1) இந்த திரைப்படத்தின் வெற்றி அவரை அடுத்த நிலைக்கு அழைத்துச் சென்றது. 2) இந்த படம் ரசிகர்கள் அல்லாதவர்களை விஜய்யின் ரசிகர்களாக மாற்றியது. 3) ஏற்கனவே ரசிகர்களாக இருந்தவர்களை சூப்பர் ரசிகர்களாக மாற்றியது. (கில்லி சன் நெக்ஸ்ட்டில் கிடைக்கிறது).
துள்ளாத மனமும் துள்ளும்: விஜய்யின் ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்திய திரைப்படங்களைப் பற்றி பேசுகையில், துள்ளாத மனமும் துள்ளும் படத்தை விட்டுவிட முடியாது. இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமாரின் இனிமையான பாடல்கள் படத்துக்கு ஒரு பெரிய பிளஸ். (துள்ளாத மனமும் துள்ளும், சன் நெக்ஸ்ட் மற்றும் எம்.எக்ஸ் பிளேயரில் கிடைக்கிறது).
ஃப்ரெண்ட்ஸ்: அந்த நாட்களில் விஜய் நடித்த திரைப்படங்களிலிருந்து இந்த படம் சற்று வித்தியாசமானது. இயக்குனர் சித்திக்கின் ஸ்கிரிப்ட் மற்றும் இயக்கம் விஜய்யைப் பற்றியே எல்லாவற்றையும் உருவாக்குவதற்குப் பதிலாக, மற்ற நடிகர்களையும் பிரகாசிக்க வைத்தது. வடிவேலு நடித்த சில எவர்கிரீன் நகைச்சுவை தருணங்களைக் கொண்ட இப்படத்தில், சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். (ஃப்ரெண்ட்ஸ் சன் நெக்ஸ்ட்டில் கிடைக்கிறது)
ஷாஜகான்: ஷாஜகான் 1990’ஸ் கிட்ஸுக்கு ஒரு பெண்ணை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான வழிமுறைகளைக் காட்டியது. ஐ காண்டக்ட் வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்பட்டால் உதவி பெற தயங்காதீர்கள், போட்டியை களைந்து பொறுமையாக இருக்க, உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் சொல்லுங்கள். முழு வாழ்க்கையையும் வருத்தப்படும்படி முட்டாள்தனமாக ஏதாவது செய்ய வேண்டாம் என்றும் அந்தப் படம் நமக்குக் கற்பித்தது. (ஷாஜகான் சன் நெக்ஸ்ட்டில் கிடைக்கிறது)
யூத்: நகர்ப்புற காதல் ஹீரோவை வரையறுக்கும் மற்றொரு திரைப்படம் யூத். ஒரு பெண்ணின் இடத்தை மதிக்கிறார். தன் விருப்பத்தை அவள் மீது திணிப்பதில்லை. அதற்கு பதிலாக, தனது ஆசைகளைச் சொல்லும் பெண்ணிடம், தனது அன்பை வெளிப்படுத்துகிறார், மேலும் அதனை மறுபரிசீலனை செய்யக் காத்திருக்கிறார். நிச்சயமாக, இந்த படம் நம்பிக்கையற்ற காதல் பற்றியது தான், அதுதான் இந்த திரைப்படத்தை வெற்றி பெறச் செய்தது. (யூத் சன் நெக்ஸ்ட்டில் கிடைக்கிறது)
குஷி: எஸ்.ஜே. சூர்யாவின் காதல் நகைச்சுவை திரைப்படமான இது, இரண்டு பிடிவாதமான நபர்களுக்கு இடையிலான சிக்கலான உறவைப் பற்றியது. கோடைகாலத்தை சுவாரஸ்யமாக்க குஷி படத்தை நிச்சயம் பார்க்கலாம். (குஷி அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது)
துப்பாக்கி: விடுமுறையில் வீட்டுக்கு வரும் ராணுவ வீரர், மும்பையில் ஒரு பயங்கரவாத கும்பலின் சதி பற்றி தெரிந்துகொள்கிறார். பின்னர் விடுமுறை நாட்களை பயனுள்ளதாக மாற்றி, அந்த சதியை முறியடிக்கிறார். இடையில், அவர் தனது காதலியுடன் டூயட் பாடவும் நேரம் ஒதுக்குவார். துப்பாக்கி சரியான விடுமுறை படம். (துப்பாக்கி ஹாட் ஸ்டாரில் கிடைக்கிறது)
தளபதி விஜய் பிறந்தநாள்: பிரபலங்களின் வாழ்த்துகளால் திணறும் ட்விட்டர்!
ஜில்லா: ஒரு ஊழல் போலீஸ்காரர் பயங்கரமான ஒரு சம்பவத்திற்குப் பிறகு மனசாட்சியால் தாக்கப்படுகிறார். அந்த திருப்புமுனை அவரது தந்தைக்கு எதிராகச் செல்லும். ஜில்லா படத்தில் விஜய் மற்றும் மோகன்லால் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். வேறு என்ன வேண்டும்? (ஜில்லா சன் நெக்ஸ்ட்டில் கிடைக்கிறது)
பிகில்: விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து வளர்ந்தவுடன், அவர் ஒரு ஆக்ரோஷமான அவதாரத்தை எடுத்துக் கொள்வதற்காக, லேசான இயல்பான பண்புகளை இழந்தார். அவர் சிவகாசி போன்ற திரைப்படங்களிலும் நடித்தார். அதில் தனது காதலை பகிரங்கமாக வெளிப்படுத்த ஒரு பெண்ணை அச்சுறுத்தும்படி நடித்திருப்பார். இதற்கிடையே பிகில் திரைப்படம், சிவகாசிக்கு பரிகாரம் செய்வதாக எடுத்துக் கொள்ளலாம். (பிகில் அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது)
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”