HBD Thalapathy Vijay: சினிமாவைப் பொறுத்தவரை வெற்றியும் தோல்வியும் சகஜமான ஒன்று.
வெற்றியின் போது துள்ளிக் குதிக்காமலும், தோல்வியின் போது துவண்டு விழாமலும் இருப்பதும் இங்கு சில நடிகர்கள் மட்டுமே. அந்தப் பட்டியலில் நடிகர் விஜய்க்கு ஓர் முக்கிய இடமுண்டு.
தனது நடிப்பாலும் குணத்தாலும் லட்சக் கணக்கான ரசிகர்களின் மனதை வென்றிருக்கும் விஜய் நாளை தனது 45-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எப்போதுமே விஜய்யின் பிறந்தநாள் என்றால் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவார்கள். முக்கிய திரையரங்குகளில் விஜய்யின் ’மாஸ் ஹிட்’ படங்கள் திரையிடப்படும். இப்படி பொழுது போக்குகள் இருந்தாலும், மறுபுறம் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் என சமூக அக்கறையும் அந்தக் கொண்டாட்டத்தில் இருக்கும்.
/tamil-ie/media/media_files/uploads/2019/06/358d5d07-7b9f-42c0-b26e-ec646cdf9613-766x1024.jpg)
அந்த வகையில், ’தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ வட சென்னை மாவட்டம் சார்பில் ’விலையில்லா விருந்தகம்’ திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வருடத்திற்கு தினமும் காலை 109 ஏழை எளியவர்களுக்கு இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7.35 மணி முதல் 8.35 வரை 1 மணி நேரம் எழை மக்கள் அங்கு சென்று சாப்பிடலாம்.
Vijay 63 first look image : அர்ஜென்டினாக்கு ஒரு மாரடோனான்னா - Bigil க்கு Michael டா....
இந்நிலையில் இந்த வருட விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஜூன் 1-ம் தேதி முதலே தயாராகிவிட்டார்கள் ரசிகர்கள். இருப்பினும் கடந்த புதன் கிழமை, ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் வெளியானதிலிருந்து இன்னும் உற்சாகமாகி விட்டனர் விஜய் ரசிகர்கள்.
Thalapathy 63: ஜூன்.21ம் தேதி மாலை 6 மணிக்கு ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியாகிறது டைட்டில்!
இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாம். அதோடு விஜய் இரு வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், இந்துஜா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தளபதி 63’ படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், இரவு 12 மணிக்கு செகண்ட் லுக்கும் வெளியாவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும், விஜய்யின் கதாபாத்திரம் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடிகாரத்தைப் பார்த்துக் காத்திருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.
Thalapathy 63: ‘வெறி’த்தனமான தளபதி 63 டைட்டில்!
இதற்கிடையே, சத்யம் உட்பட பல திரையரங்குகளில் விஜய் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, ‘தெறி’ திரைப்படம் மறு வெளியீடு செய்யப்படுகிறது.
கடந்த வருடம் இதே நாளில் தான் விஜய்யின் சர்கார் பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது, இந்த வருடம் ‘தளபதி 63’ ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நிலையில், கடந்த வருடத்தைவிட கொண்டாட்டத்தை தூள் கிளப்ப வேண்டும் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்!
இதைத் தொடர்ந்து ட்விட்டரில் #Thalapathy63FLDay என்ற ஹேஷ் டேக்கில், விஜய் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். ’கத்தி, தெறி, மெர்சல், சர்கார்’ ஆகியப் படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கும், விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போது தான் வெளியிடப்பட்டன. அந்த வகையில் இன்று வெளியாகும் தளபதி 63 ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Bigil First Look Poster
வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல், சி.எம், அடாவடி, அதிரடி, ஆளப்போறான் தமிழன், அசால்ட் ஆகியப் பெயர்கள் தளபதி 63 பட டைட்டிலாக இருக்கலாம் என்பது ரசிகர்களின் எண்ணம். அதனை அதிகாரப்பூர்வமாக தெரிந்துக் கொள்ள இன்னும் சற்று நேரம் பொறுத்திருக்க வேண்டும்!
Bigil First Look Poster - 'பிகில்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் நாம் புரிந்துக் கொள்ளக் கூடியவை...
விஜய் ரசிகர்களின் பல நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் தற்போது ‘தளபதி 63’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ‘பிகில்’ என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் அப்பா - மகன் என இரு வேடங்களில் விஜய் நடிப்பது போஸ்டரில் உறுதியாகியுள்ளது.
கரை போட்ட பழுப்பு நிற வேட்டியில் நாற்காலியில் அமர்ந்து, ஒரு கையை இடுப்பிலும், மறு கையை கால் முட்டியிலும் வைத்திருக்கிறார் அப்பா விஜய். அவர் கை வைத்திருக்கும் அந்த வலது காலை, ஒரு மரக் கட்டையில் வைத்திருக்கிறார். அருகிலேயே நீண்ட அருவாள் ஒன்று கட்டையில் வீசப்பட்டுள்ளது. வழித்து சீவிய தலை, நெற்றியில் குங்குமம், கண்களில் மிரட்சி அக்மார்க் ’பெரிய தலை’யாகக் காட்சியளிக்கிறார். இவர் தான் ‘பிகில்’!
பெரியார்- அண்ணா உடன் விஜயை ஒப்பிட்ட ரசிகர்கள் - ஆங்கிலத்தில் படிக்க
பின்னால் நிற்கும் மகன் கையில் கால்பந்தை தூக்கி வீசியவாறு, தெனவெட்டாக நிற்கிறார். இவர்கள் இருவரும் இருக்கும் இடம் மீன் மார்க்கெட், பொதுவாகவே வட சென்னை மக்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவார்கள். ‘பிகில்’ ஃபர்ஸ்ட்லுக்கில் காட்டப்பட்டிருக்கும் குறியீடுகளின்படி, வடசென்னையை மையப் படுத்திய படமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகம்!
இன்று இரவு 12 மணிக்கு செகண்ட் லுக் வருகிறது. அதில் எந்த மாதிரியான விஷயங்கள் இடம் பெறுகிறது என்பது தெரிந்தால், ஓரளவு யூகிக்கலாம்!