இலியானா டி குரூஸ் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். (புகைப்படங்கள்: இலியானா டி'குரூஸ்/இன்ஸ்டாகிராம்)
Advertisment
நடிகை இலியானா டி குரூஸ் தனது முதல் குழந்தையுடன் கர்ப்பமாக இருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். இன்ஸ்டாகிராமில், "விரைவில் வருகை, என் குட்டி அன்பே உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது" என்று பதிவிட்டுள்ளார். இலியானா தனது பதிவில் இரண்டு புகைப்படங்களைச் சேர்த்துள்ளார்; முதலாவது புகைப்படத்தில் குழந்தைகள் அணியக்கூடிய உடை, இரண்டாவது புகைப்படத்தில் 'அம்மா' என்று எழுதப்பட்ட பதக்கச் சங்கிலி.
இலியானா பகிர்ந்துள்ள புகைப்படத்தில் குழந்தைகள் அணியக் கூடிய உடையில் "அதனால் சாகசம் தொடங்குகிறது," என்று எழுதப்பட்டுள்ளது. இலியானாவின் நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் கருத்துகள் பிரிவில் அவருக்கு அன்பையும் ஆசீர்வாதத்தையும் பொழிந்தனர். இலியானாவின் தாயார் சமிரா டி குரூஸ், “எனது புதிய பேரக் குழந்தையே விரைவில் உலகிற்கு வா, என்னால் காத்திருக்க முடியாது” என்று கருத்து தெரிவித்ததோடு, சிவப்பு இதயம் மற்றும் நடன எமோஜியையும் சேர்த்துள்ளார். மேலும் பல சமூக ஊடக பயனர்கள் இலியானாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். “ஆஹா, வாழ்த்துக்கள். ஆல் தி பெஸ்ட்” என்று ஒரு ரசிகர் எழுதினார். "வாழ்த்துக்கள் அன்பே" என்று மற்றொருவர் எழுதினார்.
குழந்தையின் தந்தையின் பெயரை இலியானா குறிப்பிடவில்லை. இலியானா முன்பு ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபோனுடன் காதல் உறவில் இருந்தார், ஆனால் அவர்கள் 2019 இல் பிரிந்ததாகக் கூறப்பட்டது. மிக சமீபத்தில், அவர் நடிகை கத்ரீனா கைஃபின் சகோதரர் செபாஸ்டியனுடன் டேட்டிங் செய்வதாக வதந்தி பரவியது. இலியானா கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு தனது பிறந்தநாள் பயணத்தில் கத்ரீனாவுடன் சென்றார். பின்னர் 2022 இல் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டபோது, கத்ரீனாவிடம் அவரின் குடும்பத்துடனான இலியானாவின் தொடர்பு பற்றி கேட்கப்பட்டது. கரண் கூறுகையில், “மாலத்தீவு பயணத்தின் சில படங்கள் வெளிவந்தன, நான் என் தலையில் சில கணக்குகளை செய்து கொண்டிருந்தேன். நான் ‘சரி, இந்த இருவரும் ஒரு பார்ட்டியில் எனக்கு முன்னால் முதன்முதலில் சந்திப்பதை நான் பார்த்தேன்’ என்றும், மேலும் ‘விஷயங்கள் வேகமாக நகர்ந்து வருகிறது’ என்றும் சொல்லிக் கொண்டேன்,” என்று கூறினார்.
இலியானா முக்கியமாக தெலுங்கு மற்றும் இந்தி மொழித் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார். 2006 ஆம் ஆண்டு தேவதாசு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் பர்ஃபி! மற்றும் ரஸ்டோம் படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். தற்போது, அன்ஃபெயர் அண்ட் லவ்லி படத்தில் நடிக்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil