Vaathi Coming Othu : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், அர்ஜுன் தாஸ், உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
குவாரண்டைன் நேரம்: டிக் டாக் டான்ஸில் பிஸியான த்ரிஷா!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் மாஸ்டர் முக்கிய இடத்தில் உள்ளது. ஏப்ரலில் இந்தப் படம் வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாரவலால் வெளியீடு தாமதமாகியுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ள மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங் ஒத்து’ என்ற பாடல் பலரையும் நடனமாடச் செய்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் பாடலுக்கு, சாந்தனு நடனமாடியிருந்தார். அந்த வீடியோ பெரும் வரவேற்புடன் லட்சக் கணக்கான பார்வைகளை பெற்றது.
இந்நிலையில், காமெடி நடிகர் ரோபோ சங்கரும், அவரது மகள் இந்திரஜாவும் நடனமாடும் வீடியோ ட்விட்டரில் வைரலாகிறது. இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடனமாடியது போலவே, ‘வாத்தி கம்மிங்' பாடலுக்கு இந்த அப்பாவும், மகளும் டிக் டாக்கில் நடனமாடி அசத்தியுள்ளனர். டிக் டாக் நடனத்தின் மூலம் பிரபலமான இந்திரஜா, விஜய்யின் முந்தைய படமான ‘பிகில்’ திரைப்படத்தில், கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். அதேபோல் இந்திரஜாவின் அப்பா ரோபோ ஷங்கர், விஜய்யின் ‘புலி’ படத்தில் நடித்திருந்தார். தற்போது அஜித்தின் வலிமை படத்தில் நடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் நடைமுறைக்கு வருகிறது “லாக்-டவுன்”
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”