‘என் குழந்தைகள் என்னை நினைத்து பெருமைப்பட வேண்டும்’ – ஜோதிகா

ஒரு படம் பெரியதாக இருப்பதால் நான் அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை.

By: May 27, 2020, 11:04:04 AM

Jyotika : 2015 ஆம் ஆண்டில் அவர் ரீ எண்ட்ரி ஆனதிலிருந்து, ஜோதிகாவின் திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. அவர் ஒரே மாதிரியான பெண் கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை. எல்லா வாய்ப்புகளுக்கும் நன்றியுடன் உணர்கையில், நடிகை தனது நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி சமூகம் தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக பெண்களின் சவால்களைப் பற்றி பேச விரும்புகிறார்.

கொரோனாவின் கோரம் : ஒரு மாதத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு

அவரது வரவிருக்கும் திரைப்படமான ’பொன்மகள் வந்தாள்’ டிரெய்லர் ஒரு தொடர் கொலையாளி வழக்கு சம்பந்தப்பட்ட, நீதிமன்ற படத்திற்கு உறுதியளித்தது. இது ஒரு த்ரில்லர் மட்டுமல்ல, படத்தில் ஒரு முக்கியமான சமூக செய்தியும் உள்ளது என்று ஜோதிகா கூறுகிறார். சூரியா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, புதுமுகம் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கியிருக்கிறார். இந்த படம் மே 29 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

ஜோதிகாவுடன் பேசிய உரையாடலை கீழே குறிப்பிடுகிறோம்…

’பொன்மகள் வந்தாள்’ ஒரு மகிழ்ச்சியான தலைப்பு, ஆனால் படம் மிக தீவிரமாகவும் இருட்டாகவும் தெரிகிறது. இந்த தலைப்பு திரைப்படத்திற்கு பொருத்தமானது என்று ஏன் நினைத்தீர்கள்?

முரண்படுவது எப்போதும் நன்றாக இருக்கும். இது கிளிஷே ஆகாது. நிச்சயமாக தலைப்பு படத்துடன் தொடர்புடையது. அதைப் பார்க்கும் போது, உங்களுக்கு புரியும்.

நீங்கள் மீண்டும் வந்ததிலிருந்து, ஆணாதிக்கக் கருத்துக்களை ஆக்ரோஷமாகவும் இடைவிடாமலும் சவாலாக செய்கிறீர்கள். உங்கள் ஓய்வு காலத்தில் என்ன நடந்தது? எந்த குறிப்பிட்ட சம்பவம், திரைப்படம் அல்லது புத்தகம் சமரசமற்றதாக மாற உங்களைத் தூண்டியது.

இல்லை, நிச்சயமாக இல்லை. இதற்கு கடுமையான எதுவும் இருக்க வேண்டியதில்லை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் சொந்த வாழ்க்கையைப் பார்த்தால், நீங்கள் மிகவும் வித்தியாசமாக இருந்திருப்பீர்கள். உங்கள் சிந்தனை செயல்முறை முற்றிலும் வேறுபட்டிருக்கும். நான் இப்போது இன்னும் பொறுப்பாகிவிட்டேன் என்று நினைக்கிறேன். எனக்கு குழந்தைகள் உள்ளனர், அவர்கள் என்னைப் நினைத்து பெருமைப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு வாழ்க்கையின் வெவ்வேறு வட்டங்களில் இருந்து நண்பர்கள் உள்ளனர். வேலை மற்றும் வேலை செய்யாதவர்கள், என அவர்களிடம் நான் நிறைய கற்றுக்கொள்கிறேன். நிறைய பேச வேண்டும். நான் ஒரு குரலாக இருக்க விரும்புகிறேன். பெண்களுக்கு இன்னும் அந்த ஆதரவு தேவை. சில ஸ்கிரிப்ட்களைப் பெறுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும், அதிர்ஷ்டசாலியாகவும் உணர்கிறேன்.

ஒரு திரைப்படத்தை பெண்களை மையமாகக் கொண்டு அதிகமாக மார்க்கெட் செய்யும் போது நீங்கள் பயப்படவில்லையா, அது பார்வையாளர்களின் அளவைக் குறைக்கும், பரந்த பார்வையாளர்களை அடையாமலும் போகுமே…

ஆமாம், ஒவ்வொரு முறையும் ஒரு (பெண்களை மையமாக வைத்த) படம் சிறியதாக இருக்கும். அதை வெளியிட நாங்கள் போராடுகிறோம். ஒவ்வொரு முறையும் அதை வெளியிட தகுந்த இடைவெளிக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஒரு படம் பெரியதாக இருப்பதால் நான் அதன் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. நான் அந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறேன், ஏனென்றால் நான் அதன் ஒரு பகுதியாக இருப்பது அந்த படத்தை பெரிதாக்குவதாக நம்புகிறேன். நான் என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன். நான் வெளியில் வரும் போது, சில நல்ல வேலைகளைச் செய்கிறேன் என்று அவர்கள் உணர விரும்புகிறேன். தினமும் காலையில் நான் செய்யும் தரமான வேலையை எனது குழந்தைகளும் குடும்பத்தினரும் அறிய விரும்புகிறேன்.

இண்டிகோவில் கோவை பயணம்: சென்னையிலிருந்து சென்ற பயணிக்கு கொரோனா தொற்று

COVID-19 நேரத்தில் சினிமா வணிகத்தில் என்ன குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காண்போம்?

நீங்கள் அனைவரும் ஆன்லைன் நேர்காணல்களைச் செய்வது மிகவும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை – இது விலை உயர்ந்ததா, மலிவானதா?

நாம் அனைவரும் மீண்டும் அதே நிலைமைக்கு திரும்ப வேண்டும் என்று நினைக்கிறேன். அதிக மாற்றம் இருக்காது. லாக்டவுன் முடிந்தவுடன் நாம் அனைவரும் மீண்டும் நமது சொந்த மண்டலத்திற்குச் செல்வோம் என்று நினைக்கிறேன். ஆனால் ஒரே கேள்வி – இன்னும் எவ்வளவு காலம்? என்பது தான்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Jyothika ponmagal vandhal amazon prime release on 29th may

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X