க/பெ ரணசிங்கம்: இதுவரை ஓடிடி-யில் வெளியான படங்களில் இது தான் டாப்!

காக்கா முட்டை, கனா வரிசையில், க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஐஸ்வர்யா திரை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Ka Pae Ranasingam Tamil Movie Review
க/பெ ரணசிங்கம் விமர்சனம்

Ka Pae Ranasingam Tamil Movie Review: கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால், படங்களின் வெளியீடு தள்ளிப்போய் இருக்கிறது. இருப்பினும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பென்குயின் ஆகியப் படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகின. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதி, ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

ஹீரோவாக பிரபல நடிகர்: இயக்குநராக தயாநிதி அழகிரி!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவன் இறந்துவிட, அவனது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர, மனைவி படும் துயர் தான் க/பெ ரணசிங்கம் படத்தின் கதை.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் சிற்றூரில் மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கிறார் ரணசிங்கம் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி. இதனால் அரசு அதிகாரிகளின் பகையைச் சம்பாதிக்க நேர்கிறது. ஒரு கட்டத்தில் தன்னுடன் போராடிக் கொண்டிருந்த அத்தனை பேரும் விலகி நிற்க, மனைவியின் பேச்சைக் கேட்டு வெளிநாடு சென்று வேலை பார்க்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் நடந்த கலவரத்தில் அவர் இறந்ததாக செய்தி வருகிறது.

கணவனின் உடலை சொந்த ஊர் கொண்டு வர, கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சித் தலைவர், எம்எல்ஏ, மத்திய அமைச்சர் என்று எல்லோரிடமும் நடையாய் நடந்து, அலைந்து கோரிக்கை மனு கொடுக்கிறார் ரணசிங்கத்தின் மனைவி அரிய நாச்சி. பல்வேறு இன்னல்களைக் கடந்து கணவனின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வந்து நல்லடக்கம் செய்தாரா? என்பதே மீதிக் கதை.

வெளிநாட்டில் வேலை செய்யச் சென்றவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் உடலை மீட்பதில் என்ன மாதிரியான சட்டச் சிக்கல்கள் நிகழும் என்பதில் இயக்குநர் விருமாண்டி கொடுத்திருக்கும் டீட்டெய்லிங் அதிர்ச்சி அளிக்கிறது. நீட்டிக்கப்பட்ட கதாபாத்திரமாக விஜய் சேதுபதியை சொல்லலாம். புதிய விஷயங்களை முயற்சித்துப் பார்ப்பவர், இதையும் விடவில்லை. அது வெற்றியும் பெற்றிருக்கிறது.

இரண்டாம் பாதி படத்தை தோளில் தூக்கி சுமக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்கா முட்டை, கனா வரிசையில், க/பெ ரணசிங்கம் திரைப்படமும் ஐஸ்வர்யா திரை வாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு உதவும் கதாபாத்திரங்களாக ஜி.வி. பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது நடந்தால் கல்யாணமாம்… அது எப்போ நடக்குறது?

ஜிப்ரானின் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இயக்குனரின் சமூக அக்கறை மற்றும் தரமான திரைக்கதை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இ.கே. ஏகாம்பரத்தின ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றிணைக்கிறது. மொத்தத்தில் இதுவரை ஒடிடி-யில் வெளியான படங்களில் சிறந்த படமென க/பெ ரணசிங்கம் திரைப்படத்தை சொல்லலாம்.
 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ka pae ranasingam review rating tamil movie review vijay sethupathi aishwarya rajesh

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express