Kaithi Hindi Remake : கடந்தாண்டு வெளியான படங்களில் கார்த்தியின் கைதி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்தியுடன் இணைந்து, நரேன், ஜார்ஜ் மரியான், தீனா, அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முன்னணி கதாநாயகி இல்லாததும், பாடல்கள் இல்லாததும் கைதி மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தன.
கிரிக்கெட் வீரருடன் டூயட்! லாஸ்லியாவுக்கு இப்படி ஒரு ’லக்’கா?
Happy to join hands with @RelianceEnt to produce #Kaithi in Hindi. #KaithiInHindi pic.twitter.com/mnrVf3qKeh
— DreamWarriorPictures (@DreamWarriorpic) February 3, 2020
தீபாவளிக்கு விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் இணைந்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனித்துவமான கதை, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்நிலையில், ‘கைதி’ திரைப்படம் பாலிவுட்டுக்கும் செல்கிறது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஆர்.பிரபுவின், ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து இதனை தயாரிக்கிறது.
போராட்டத்துக்காக பள்ளி மாணவர்களை கடத்திய நாம் தமிழர் பிரமுகர் – பரிதவிப்பில் பெற்றோர்
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இருப்பினும் கைதி இந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.