’நாம் கடைசியாகக் கூட இருக்கலாம்’: காஜல் அகர்வால் உருக்கமான பதிவு
Coronavirus : இந்தியாவிலும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
Kajal Agarwal : உலக சுகாதார அமைப்பு கொரோனாவை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. இந்நோயைத் தடுக்க தனிமைப்படுத்தல், முகமூடிகளை அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை பின்பற்றுமாறு, பல நாடுகள் அறிவுத்தியுள்ளன. இந்தியாவிலும் கொரோனா வைரஸை தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.
இந்த கொரோனா தொற்று அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியிக்கும் நிலையில், நடிகை காஜல் அகர்வால் இது குறித்த உணர்வுப்பூர்வமான பதிவொன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ஒரு ஓட்டுநரின் கதை தான் அது.
”கடந்த 48 மணி நேரத்தில் நான் தான் அவருடைய முதல் வாடிக்கையாளர் என்று ஒரு கேப் டிரைவர் என்னிடம் அழுதார். அவரது மனைவி குறைந்தபட்சம் மளிகைப் பொருள்களையாச்சும் வாங்கி வருவேன் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வைரஸ் பல வழிகளில் நம்மைத் தாக்கும், ஆனால் அன்றாட வருமானத்தை சார்ந்து இருப்பவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். நான் அந்த ஓட்டுநருக்கு கூடுதலாக 500 ரூபாய் கொடுத்தேன். இது நம்மில் பெரும்பாலோருக்கு பெரிய விஷயமல்ல. அதனால் இதை நாம் அதிகமாக செய்ய வேண்டும். அவர் தனது கடைசி வாடிக்கையாளருக்கான சவாரியில் 70 கிலோமீட்டர் தூரம் ஓட்டியிருப்பதை எனக்குக் காட்டினார். தயவுசெய்து உங்கள் வண்டி ஓட்டுநர்கள், தெரு விற்பனையாளர்கள் போன்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பணம் கொடுங்கள். நீங்கள் அந்த நாளின் கடைசி வாடிக்கையாளராகக் கூட இருக்கலாம்” என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் காஜல்.