நாட்டாமை, முத்து, இந்தியன் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக பிரச்சினையால் சென்னை அடையாறிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil News Today Live : 8 போலீஸாரை கொன்ற ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொலை
இதை அறிந்ததும், நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் பொன்னம்பலத்தை அணுகி, அவருக்கு உதவி செய்து வருகிறார். அவரை தினமும் அழைத்துப் பேசி, அவரது முன்னேற்றத்தைக் கண்காணிப்பதாக தெரிகிறது. பொன்னம்பலத்தின் நிலையை புரிந்துக் கொண்ட கமல், அவரது இரண்டு குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஏற்றுக்கொள்ள முன் வந்துள்ளார்.
செய்தி தொடர்பாளர் மூலம் மருத்துவமனையிலிருந்து வீடியோ ஒன்றையும் பொன்னம்பலம் பகிர்ந்துள்ளார். 56 வயதான இவர் ஒரு ஸ்டண்ட்மேனாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அபூர்வ சகோதரர்கள் மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் போன்ற கமல்ஹாசனின் படங்களில் அவரின் கதாபாத்திரங்கள் கவனம் பெற்றன. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த முத்து திரைப்படம் அவருக்கு பெரிய திருப்பத்தைக் கொடுத்தது.
கொய்யா இலை தேநீர்… எவ்ளோ நன்மைன்னு பாருங்க!
2011-ல் பொன்னம்பலம் அரசியலிலும் இறங்கினார். அதன் பின்னர் இரண்டு அரசியல் கட்சிகளுக்கு மாறியிருக்கிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் தமிழிலும் அவர் ஒரு போட்டியாளராக இருந்தார். அந்நிகழ்ச்சியின் 2-வது சீசனில் ஹவுஸ்மேட்டாக அவரது நடவடிக்கைகள் பார்வையாளர்களை ஈர்த்திருந்தாலும் வேறு சில காரணங்களுக்காக அவரை ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனது. சில வாரங்கள் கழித்து வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக ஜெயம் ரவியின் திரைப்படமான கோமாளியில் பொன்னம்பலம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”