Kangana Ranaut : பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இதற்காக பல சவாலான விஷயங்களை சந்தித்து வருகிறார் கங்கனா.
காதலிக்க மறுத்த 8-ம் வகுப்பு மாணவி; கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரின் கொடூரச் செயல்
அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்திருக்கும் விஷயம் இணையத்தில் வைரலாவதோடு, கங்கனாவின் டெடிகேஷனுக்கு கைத்தட்டல்களும் கிடைத்து வருகின்றன. அதாவது ஜெயலலிதா நடிப்பில் இருந்து விலகிய பிறகு, உடல் எடை கூடினார். ஆகையால் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்யும் வகையில், தற்போது 20 கிலோ எடையைக் கூட்டியிருக்கிறார் கங்கனா. எடை சரிபார்க்கும் மெஷினில் அவர் ஏறி நின்று 70.3 கிலோ எனக்காட்டும் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் கங்கனா. வீடியோவில் கங்கனாவின் ஃபிட்னெஸ் ட்ரெயினரும் உள்ளார், அவரிடம் முன்பு தான் 52 கிலோ இருந்ததாகக் குறிப்பிடுகிறார். தவிர தலைவி படத்திற்காக பரதநாட்டியத்தையும் கற்றுக் கொண்டார்.
’மாஸ்டர்’ மாளவிகா முதல் ’தளபதி 65’ நடிகை வரை – முழு படத் தொகுப்பு
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை விஷ்ணு இந்தூரி, ஷைலேஷ் ஆர் சிங் தயாரிக்கிறார்கள். தலைவியின் ஒளிப்பதிவாளர் விஷால் விட்டல், கே வி விஜயேந்திர பிரசாத், விஜய்யுடன் இணைந்து இதற்கான ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளார். முன்னதாக, படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்கும் அரவிந்த்சாமியின் தோற்றம் வெளியாகி வைரலானது. அதோடு தலைவி திரைப்படம் ஜூன் 26-ம் தேதி வெளியாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”