கரீனா கபூர் சயிப் அலிகான்: மகளின் 25-வது பிறந்தநாளில் அடுத்த வாரிசு அறிவிப்பு!

சயிப் அலிகானின் மூத்த மகளும் நடிகையுமான சாரா அலி கான் நேற்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

By: Updated: August 13, 2020, 05:43:27 PM

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நடிகர் சயிப் அலி கானை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். 40 வயதாகும் கரீனா, திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

செல்வராகவன் வீட்ல 3-வது வாரிசு… உறுதிப்படுத்திய கீதாஞ்சலி!

கரீனா – சயிப் தம்பதிக்கு 2016-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் என்று பெயர் வைத்தனர். பாலிவுட் புகைப்படக் கலைஞர்கள் மத்தியில் தைமூர் அலி கான் மிகவும் பிரபலம். தைமூர் எப்பொழுது வீட்டை விட்டு வெளியே வருவார், அவரது படங்கள் இணையத்தில் வைரலாகும்.

இந்நிலையில், தங்கள் வீட்டிற்கு புதிதாக ஒருவர் வரவிருப்பதை கரீனா – சயிப் தம்பதியினர் அறிவித்துள்ளனர். “எங்கள் குடும்பத்திற்கு கூடுதலாக ஒருவர் வரவிருப்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு நல்வாழ்த்துக்களை கூறி, அன்பும் ஆதரவும் அளித்த அனைவருக்கும் நன்றி” என இந்த ஸ்டார் தம்பதிகள் அறிவித்தனர்.

சயிப் அலிகானின் மூத்த மகளும் நடிகையுமான சாரா அலி கான் நேற்று தனது 25-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்நிலையில் புதிய வரவு குறித்த விஷயத்தை அறிவித்தார் சயிப். இதனால் மகள் பிறந்தநாளின் போது, அப்பா சர்ப்ரைஸ் கொடுத்துருக்காரே எனப் பேசிக் கொள்கிறார்கள் ரசிகர்கள்.

’அப்பா ஆசையை நிறைவேத்தணும்’: லட்சியத்தை நோக்கி அஷ்ரிதா ஸ்ரீதாஸ்!

சயிப் அலி கானின் முதல் மனைவி அம்ரிதா சிங்குடன் அவருக்கு, 2004-ம் ஆண்டு விவாகரத்தானது. இந்தத் திருமணத்தின் மூலம், சாரா அலிகான் (25), இப்ரகிம் (19) என இரு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kareena kapoor saif ali khan announced their 2nd baby pregnancy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X