கேரளா வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கம்: ‘கிடுகிடுவென வீடு மூழ்கியது’

Kerala floods: தமிழில் நாடோடிகள், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்தவரான நடிகை அனன்யாவும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார்.

By: Updated: August 19, 2018, 01:11:35 PM

Kerala floods, Actress Ananyaa Speech in Video: கேரளா வெள்ளத்தில் சிக்கிய நடிகை அனன்யா உருக்கமாக வீடியோவில் பேசியிருக்கிறார். ‘கிடுகிடுவென வீடு தண்ணீரில் மூழ்கியது’ என்றார் அவர்!

கேரளா வெள்ளம், 300-க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து வெள்ளச் சேதத்தை பார்வையிட்டார்.

கேரளா வெள்ளம் : நிவாரண பொருட்களை அனுப்புவது எப்படி? தகவல்கள் இங்கே To Read, Click Here

கேரளாவின் துக்கத்தில் பங்கெடுக்கும் அண்டை மாநிலத்தார்கள் – குவியும் வெள்ள நிவாரண நிதி To Read, Click Here

375 பேர் பலி, ரூ 19,500 கோடி இழப்பு, மத்திய அரசு ரூ 600 கோடி உதவி: கேரளா சோகம் To Read, Click Here

கேரளா வெள்ளச் சீற்றத்திற்கு சாதாரண குடிமக்கள் முதல் வி.ஐ.பி.க்கள் வரை யாரும் தப்பவில்லை. சில நாட்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் நடிகர் பிரிதிவிராஜின் வீட்டுக்குள் வெள்ளம் சென்றதையடுத்து, மீட்புப் படையினர் அவரின் வீட்டுக்குள் சென்று அவரின் தாயைப் பாதுகாப்பாக மீட்டனர். நடிகர் ஜெயராமும் அவரின் குடும்பத்தினரும் காரில் நேற்று முன்தினம் சென்ற போது, நிலச்சரிவில் சிக்கினார்கள். பின்னர் இந்தத் தகவல் அறிந்து மீட்புப் படையினர் வந்து அவர்களை மீட்டனர்.


இந்நிலையில் தமிழில் நாடோடிகள், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்தவரான நடிகை அனன்யாவும் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறார். கொச்சியில் வசித்து வரும் அனன்யாவின் வீட்டை வெள்ள நீர் சூழ்ந்தது. 2 நாட்களாக வெள்ள நீரில் சிக்கித் தவித்த அவரை மீட்டுப் படையினர் மீட்டு பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத்தின் (பாபநாசம் படத்தில் நடித்தவர்) வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர்.

அனன்யா பேஸ்புக் வீடியோ மூலம் தனக்கு நேர்ந்த கதியைத் தெரிவித்துள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: ‘கடந்த 2 நாட்களாக மழையில் சிக்கி நாங்கள் பட்ட துன்பத்தைச் சொல்ல இயலாது. எங்கள் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டது.

அதன்பின் மீட்டுப் படையினர் மூலம் மீட்கப்பட்டு, வெள்ளிக்கிழமை காலையில்தான் பாதுகாப்பாக பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா சரத்தின் வீட்டுக்கு வந்தோம். கடந்த 2 நாட்களாக மிகவும் மோசமான சூழலில் சிக்கி இருந்தோம்.


சில நிமிடங்களில் வெள்ள நீர் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. என்னுடைய உறவினர்கள் அனைவரின் வீடும் வெள்ள நீரில் சிக்கி இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என எங்களுக்குத் தெரியாது. அனைத்தும் கடவுள் கையில்தான் இருக்கிறது.

இன்னும் மழை பெய்து கொண்டு இருக்கிறது. மிகவும் மோசமான அனுபவத்தை மக்கள் சந்தித்து இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏராளமானோர் உதவிக்கரம் நீட்டி இருக்கிறார்கள். பெரம்பாவூரிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.

ஏராளமானோர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். எங்களை வெள்ளத்தில் இருந்து மீட்ட அனைவருக்கும் நன்றி.’  இவ்வாறு நடிகை அனன்யா கூறினார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Kerala floods actress ananyaa speech in video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X