scorecardresearch

குஷ்பு – ராதிகா மோதல்? சின்னத்திரை சலசலப்பு

குஷ்புவுக்கும் ராதிகாவுக்கும் மோதல் தொடங்கிவிட்டதே என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், நம் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த ட்வீட்.

Khushboo Sundar, Radhika Sarathkumar
Khushboo Sundar, Radhika Sarathkumar

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு மாதமாக இந்தியா முழுவதும் முடக்கத்தில் உள்ளது. இதனால் அத்தியாவசியம் தவிர, அனைத்து வேலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மேலும் நான்கு பத்திரிகையாளர்களுக்கு கொரோனா உறுதி!

அந்த வகையில் சினிமா, சின்னத்திரை ஆகிய பொழுதுபோக்கு துறைகளும் பலத்த சரிவை கண்டுள்ளன. இந்த நேரத்தில் சின்னத்திரையிலும் கோலோச்சிக் கொண்டிருக்கும் வெள்ளித்திரை நாயகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. ”லாக் டவுன் மே 3-ம் தேதி முடிந்துவிடும். ஷூட்டிங்கை 5-ம் தேதி தொடங்கி மே 11-ம் தேதி முதல் எபிசோடுகளை ஒளிபரப்பக் கொடுங்கள்”, என டிவி தரப்பு சொன்னதாக குஷ்பு ஆடியோ ஒன்றை வெளியிட, சின்னத்திரை வட்டாரத்தில் அது பேசுபொருளானது.

இதற்கு பதில் தரும் விதமாக, “டிவி தரப்பு கட்டாயப்படுத்தவில்லை” என இன்னொரு ஆடியோ வெளியிட்டார் ராதிகா. இதில் எது உண்மை என்ற கேள்வி சின்னத்திரை வட்டாரத்தில் மேலோங்கியது.

”பழைய நிகழ்ச்சிகளுக்கு விளம்பர வருவாய் பெருசா இல்லை. அதனால எப்ப ஊரடங்கு முடியும்னு காத்திட்டிருக்கிற சில சேனல்கள்ல, சீரியல் யூனிட்டுகளைக் கூப்பிட்டு வீடியோ கான்ஃப்ரன்ஸ்ல ஒரு மீட்டிங் நடத்தியிருக்காங்க. அப்ப `மே 5 ஷூட்டிங் ரெடியா இருங்க’னு சொன்னதுடன், நடிகர், நடிகைகளுக்கும் தகவல் சொல்லி தயாரா இருக்கச் சொல்லுங்கன்னு சொல்லியிருக்காங்க. இதை வைத்தே குஷ்பு பேசியிருக்கணும்” என சின்னத்திரை சங்கத்திலிருக்கும் ஒருவர் விளக்கினார்.

குஷ்புவுக்கு பதில் சொல்லும் வகையில் ராதிகாவின் ஆடியோ குறித்து, “ஊரடங்கு முடிஞ்சாலுமே அடுத்த சில நாள்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கணும்னு அரசு சொல்லலாம். கூட்டம் கூடுறதையெல்லாம் நிச்சயமா அனுமதிக்க மாட்டாங்க. இந்தச் சூழல்ல ஷூட்டிங் நடத்தலாமா, கூடாதாங்கிறது குறித்து அரசு உத்தரவு தேவையிருக்கும். இப்படியிருக்க, `ஷூட்டிங்கைத் தொடங்கச் சொல்லி சேனல்கள் நெருக்கடி’ங்கிற அர்த்தத்துல குஷ்புவின் கருத்து இருந்ததாலேயே, தானும் ஒரு சீரியல் தயாரிப்பாளர்ங்கிற முறையில் ராதிகா பேசியிருக்காங்க. தவிர, ஷூட்டிங் தொடங்குவது குறித்த மீட்டிங் எல்லாச் சேனல்கள்லயுமே போட்டிருக்காங்க. ஆனா ஆர்ட்டிஸ்ட்களை வரச் சொல்லிச் சில சேனல்கள்ல மட்டுமே சொல்லியிருக்காங்க’’ என்றார் அவர்.

சரி இந்த விஷயத்தில் குஷ்புவுக்கும் ராதிகாவுக்கும் மோதல் தொடங்கிவிட்டதே என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், நம் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த ட்வீட்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி – தாமதமாகிறது அகவிலைப்படி உயர்வு

தான் 14 வயதில் எடுத்துக் கொண்ட படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் குஷ்பு. அதற்கு, ‘ஒரே மாதிரியாக இருக்கிறாய்’ என்ற கமெண்டுடன் ஹார்டினையும் பதிவிட்டிருந்தார் ராதிகா. அதற்கு, ‘மிக்க நன்றி டியர்’ என பதிலளித்திருந்தார் குஷ்பு. ஆகையால் இருவருக்கும் தனிப்பட்ட வகையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது தெளிவாகிறது. தொழில் வேறு, நட்பு வேறு என்ற முதிர்ச்சியான கண்ணோட்டத்தை இருவரும் கையாள்கிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Khushbu sundar radhika sarathkumar cold war on serial shooting

Best of Express