யூ-ட்யூப் நேரலை விவகாரம்: வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய லட்சுமி ராமகிருஷ்ணன்

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதற்காக லட்சுமியிடம் கடுமையாக வாதாடினார் வனிதா. இந்த உரையாடல் நேரலை விவாதத்தை கடினமாக்கியது.

By: July 28, 2020, 12:33:52 PM

சில நாட்களுக்கு முன்பு யூடியூப் சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நேரலை விவாதத்தில், தன்னுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட வானிதா விஜயகுமார் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார், இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன். பீட்டர் பாலுடனான வனிதாவின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்ததால், வனிதாவுக்கும், லட்சுமி ராமகிருஷ்ணனுக்கும் முரண்பாடு தொடங்கியது.

நடிப்பு ’அசுரன்’ தனுஷ்: திரையில் வெற்றி மாறன் நிகழ்த்திய மேஜிக்!

தனது தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட்டதற்காக லட்சுமியிடம் கடுமையாக வாதாடினார் வனிதா. இந்த உரையாடல் நேரலை விவாதத்தை கடினமாக்கியது. வனிதா தன்னை துஷ்பிரயோகம் செய்வதாகக் கூறி உரையாடலை பாதியிலேயே முடித்தார் லட்சுமி. இப்போது, நடிகை-இயக்குநர் லட்சுமி, ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளார், அதில் அவர் வனிதாவுக்கு லீகல் நோட்டீஸை அனுப்பியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ஒரு youtube Channel ஏற்பாடு செய்திருந்த Skype நேர்காணலின்‌ போது, வனிதா விஜயகுமார்‌ என்னையும்‌ எனது கணவரையும்‌ அநாகரிக வார்த்தைகளால்‌ தாக்கி பேசியிருந்தார்‌. என்னுடன்‌ பேச வேண்டும்‌ என்று வனிதா விஜயகுமார்‌ தான்‌ அந்த சேனலை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டிருக்கிறார்‌. ஆனால்‌ நேர்காணலில்‌ வேண்டுமென்றே தவறாக பேசினார்‌.

Tamil News Today Live: ’ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மனப்பூர்வ ஆதரவு’: அமைச்சர் வேலுமணி

பின்னர்‌ அது ஒளிபரப்பும்‌ செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, நானும்‌ எனது கணவரும்‌ எங்களது வழக்கறிஞர்‌ மூலமாக வனிதா விஜயகுமாருக்கு, குற்றவியல்‌ (Criminal) மற்றும்‌ உரிமையியல்‌ (Civil) சட்டத்தின்‌ கீழ்‌ நோட்டீஸ்‌ அனுப்பியுள்ளோம்‌. அதன்படி, Inspector, All Women’s Police Station, Vadapalani & SRMC station, Deputy Commissioner of Police, Vadapalani, Asst Commissioner மற்றும்‌ தமிழ்நாடு மாநில பெண்கள்‌ ஆணையம்‌ (Mahila Ayog) ஆகியோருக்கும்‌ நோட்டீசின்‌ நகல்‌ அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Lakshmy ramakrishnan sends legal notice to vanitha vijayakumar on youtube interaction

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement