Bigg Boss Losliya Mariyanesan : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் இலங்கையைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். அவருக்கு பிக் பாஸ் மூலம் சர்வதேச அளவில் இருக்கும் தமிழ் மக்களிடம் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது விதவிதமான படங்களை பகிர்ந்து வருகிறார். அதோடு படங்களிலும் கமிட்டாகியுள்ளார்.
லாஸ்லியா தந்தை திடீர் மரணம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்ச்சியில் கலந்துக் கொண்ட லாஸ்லியா சக போட்டியாளரான கவினுடன் காதலில் விழுந்தார். இதனால் போட்டியில் கவனச் சிதறல் ஏற்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே லாஸ்லியாவின் பெற்றோர் வருகையால் பிக் பாஸ் வீடே அப்போது பெரும் பரபரப்பாக இருந்தது. மற்ற போட்டியாளர்களின் பெற்றோர் போல் இல்லாமல், லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அவரிடம் தனது கோபத்தைக் காட்டினார். இதனால் சக போட்டியாளர்களைப் போலவே மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
முதலில் லாஸ்லியாவின் அம்மா உள்ளே வர, கவின் பெரும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்து சூறாவளியாக உள்ளே வந்த லாஸ்லியாவின் அப்பா பேசியதைக் கேட்டு, அவர் மிரண்டே போய் விட்டார். லாஸ்லியா தன் பெற்றோரைப் பார்த்த ஆனந்தத்திலும், பயத்திலும் அழுதுக் கொண்டிருக்க, மறுபுறம் கவினும் அழுதுக் கொண்டிருந்தார். ஒரு மிடில் கிளாஸ் தந்தையாக லாஸ்லியாவின் அப்பா பேசியது அனைத்துமே நியாயமான கருத்துக்கள் தான் என நெட்டிசன்களிடம் ‘அப்ளாஸ்’ வாங்கினார் மரியநேசன்.
இலங்கையில் வசித்தாலும், அப்பா கனடாவில் இருப்பதால், விடுமுறைக்கு மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் லாஸ்லியாவின் அப்பா. ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் வந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது லாஸ்லியாவுக்கு.
பாசம் ஒருபுறம் இருந்தாலும், ஒழுக்கம் கட்டாயம் என்பதை அடிகோடிட்ட அவரின் அப்பா மரியநேசன், முதலில் மகளை கண்டித்தார், பின்னர் அன்பு மழை பொழிந்தார்.
Tamil News Today Live: தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
’இது ஒரு கேம். அதை அப்படியே விளையாடு. எல்லாத்தையும் தூக்கிப் போட்டுடு' என மகளுக்கு அறிவுரை கூறினார். அதோடு, ‘நான் உன்னை இப்படியா வளத்தேன். எல்லாத்தையும் இங்கேயே விட்டுட்டு வந்துடு’ என்றார்.
ஆனால் கவினிடம் எந்த கோபத்தையும் காட்டாத மரியநேசன், அவரை கட்டியணைத்து சில விஷயங்கள் பேசினார். அந்த வார இறுதியில் இது குறித்துப் பேசிய கமல், ’லாஸ்லியாவின் அப்பா என்னை விட சிறந்தவர், ஜெண்டில்மேன் போல நடந்துக் கொண்டார்’ என்று புகழ்ந்தார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”