Advertisment

டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்: லாஸ்லியா ஆர்மியினரே ரெடியா?

இந்த வாரம் லெவல் 3, டிக்கெட் டூ ஃபினாலே ரவுண்ட் நடக்கிறது. ஆகையால் போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு செல்ல, தீவிரம் காட்டி வருகிறார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bigg Boss Losliya

Bigg Boss Losliya

Dancing Super Star : தொலைக்காட்சிகளில் சீரியல்கள் பெரும்பங்கு வகித்தாலும், ஆடல், பாடல் போன்ற ரியாலிட்டி ஷோ-க்களுக்கும் ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக விஜய் டிவி-யின் ‘ஜோடி நம்பர் 1’ என்ற நடன நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அதன் பிறகு ’பாய்ஸ் Vs கேர்ள்ஸ்’, ’உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ போன்ற நடன நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பினார்கள். இந்நிகழ்ச்சிகள் மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றது.

Advertisment

முரட்டு சிங்கிள்கள் படிக்க வேண்டாம்… காதலர்களுக்கு ‘கிஸ் டே’ வாழ்த்துகள்!

இந்நிலையில் தற்போது, ’டான்சிங் சூப்பர் ஸ்டார்’ என்ற நடன நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சாண்டி, ஆலியா மானசா, டிடி, சுனிதா, மகத் என 5 பேரும் ஜட்ஜாக இருந்து வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. நிகழ்ச்சியில், இந்த வாரம் லெவல் 3, டிக்கெட் டூ ஃபினாலே ரவுண்ட் நடக்கிறது.

ஹாய் கைய்ஸ் : நிலாச்சோறு சாப்பிட்ட நமக்கு நிலாவிலேயே சோறு சாப்பிட அழைக்கிறது நாசா

ஆகையால் போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு செல்ல, தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியாவும், ‘நான் சிரித்தால்’ படக்குழுவினர்கள் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் ஆகியோரும் கலந்துக் கொள்கிறார்கள். ’எனக்கு டான்ஸ்ன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற லாஸ்லியா நடனமும் ஆடி ரசிகர்களை மகிழ்விக்கிறார். இதைப் பார்த்த லாஸ்லியா ஆர்மியினருக்கு எதிர்பார்ப்பு கூடிவிட்டது.

Vijay Tv
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment