Master 3rd Look Reactions : ’பிகில்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ‘மாஸ்டர்’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 64-வது படமாக உருவாகும் இதனை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
’மாஸ்டர்’ படத்தில் மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசை அனிருத். இதனை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரலில் ’மாஸ்டர்’ திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் வெளியாகியிருந்தன. அந்த 2 போஸ்டர்களிலுமே விஜய் மட்டும் இடம் பெற்றிருந்தார். ஆனால், விஜய்யுடன் நடிக்கும் விஜய் சேதுபதியின் லுக்கைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை மாஸ்டர் படத்தின் 3-வது லுக் போஸ்டரும் வெளியானது. முகங்களில் ரத்தம் வழிய, விஜய்யும், விஜய் சேதுபதியும் ஒருவரையொருவர் பார்த்து, ஆக்ரோஷமாக கத்துவது போல் இந்த போஸ்டர் டிஸைன் செய்யப்பட்டுள்ளது. போஸ்டரைப் பார்த்த பிரபலங்களும் ரசிகர்களும், படக்குழுவினருக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அதோடு போஸ்டர் குறித்த தங்களது எண்ணத்தையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மாஸ்டர் மூன்றாவது லுக் போஸ்டருக்கு குவிந்திருக்கும் சில ரியாக்ஷன்களை இங்கே பட்டியலிடுகிறோம்.