DMK Chief MK Stalin Praises Gypsy, Jiiva, Raju Murugan
MK Stalin : ‘ஜோக்கர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநம் ராஜூ முருகன், ‘ஜிப்ஸி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். டைட்டில் ரோலில் நடிகர் ஜீவா நடிக்க, அவருக்கு ஜோடியாக நடாஷா சிங் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
’ஜிப்ஸி’ படக்குழுவினரை பாராட்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சாலை பயணத்தில் உருவாகும் காதல், அதிலிருக்கும் சமூகப் பார்வை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர், பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், வெளியீடு மட்டும் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்நிலையில், சென்சார் போர்டின் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி, ஜிப்ஸி திரைப்படம் வரும் மார்ச் 6-ம் தேதி வெளியாகிறது.
இதற்கிடையே ‘ஜிப்ஸி’ படம், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் அரங்கில் நடந்த இந்த சிறப்புத் திரையிடலில் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, பொருளாளர் துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோரும் இப்படத்தைப் பார்த்தனர்.
படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், ’சரியான நேரத்தில் சரியான படம்’ என ‘ஜிப்ஸி’ படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார். இதற்கு முன்பு, வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவான ‘அசுரன்’ படத்தை தூத்துக்குடியில் பார்த்த ஸ்டாலின், ‘இது படமல்ல பாடம்’ என பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சென்சாரில் ’கட்’ செய்த ஜிப்ஸி பட காட்சிகளை யூ ட்யூபில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.