New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/04/Actress-Nadhiya.jpg)
Actress Nadhiya
மகள்களுடன் அவர் எடுத்துக் கொண்ட, புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.
Actress Nadhiya
நடிகை நதியா 80, 90-களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத் துறையின் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார். சிறந்த முன்னணி நடிகர்களுடன் நடித்து, சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதோடு பெரும் ரசிகர் பட்டாளத்தையும் பெற்றார்.
விக்னேஷ் சிவனுடன் அஞ்சலி குவாரண்டைன் டப்பிங்; வைரல் வீடியோ
அழகான, பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றத்தையும் கொண்ட, நதியா பல சுவாரஸ்யமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ராஜகுமாரன் திரைப்படத்திற்குப் பிறகு, நடிப்புக்கு முழுக்குப் போட்டார். பின்னர் ஜெயம் ரவியின், ’எம் குமரன் சன் / ஆஃப் மகாலட்சுமி’ படத்தில் மீண்டும் ரீ எண்ட்ரியானார். அதைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தார்.
,
View this post on InstagramA post shared by Nadiya Moidu (@simply.nadiya) on
செம்பருத்தி சீரியலுக்கு டஃப் கொடுக்குமா செந்தூரப்பூவே?
இந்நிலையில் நதியா சமீபத்தில் சமூக ஊடகங்களில் இணைந்தார். மேலும் அவரது வாழ்க்கையின் தருணங்களையும், அவரது திரைப்படங்களிலிருந்து பழமையான நினைவுகளையும் அதில் பகிர்ந்துக் கொள்கிறார். தனது மகள்களுடன் அவர் எடுத்துக் கொண்ட, புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதற்கிடையே அவர் தற்போது தனது, காலை ஒர்க் அவுட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "நல்ல ப்ரடக்ட்டிவிட்டியான நாளை, சில எளிய ஸ்ட்ரெச்களுடன் தொடங்குங்கள்” என அதற்கு தலைப்பிட்டுள்ளார். நதியாவின் இந்த ஃபிட்னெஸ் படங்கள் நெட்டிசன்களை ஆச்சர்யமடையச் செய்திருக்கிறது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.