/tamil-ie/media/media_files/uploads/2019/10/Nayanthara-Vouge-photoshoot.jpg)
Nayanthara Vouge photoshoot
Nayanthara : ஒடிசாவில் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வை தென்னிந்திய நடிகை நயன்தாரா எழுதப் போகிறாரா? நிச்சயமாக, இல்லை என்பதே அதற்கான பதில். இருப்பினும், சமீபத்தில் ஒரு ஆவணம் நமது கண்ணில் பட்டது. அதன்படி பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்வை நயன்தாரா எழுதுவதாகக் கூறப்பட்டிருந்தது. நிச்சயமாக, இங்கு தவறு நடந்திருக்கிறது. தேர்வுக்கும் நயன்தாராவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
'கமிட்டட்'கள் மிஸ் பண்ணாம பாக்க வேண்டிய 10 தமிழ் படங்கள்!
அம்மான்னா இப்படி இருக்கணும்: மகனுக்கு ஷில்பா கொடுக்கும் பயிற்சியைப் பாருங்க!
/tamil-ie/media/media_files/uploads/2020/02/card-750x430.jpg)
ஒடிசா மாநிலத்தின் வருடாந்திர பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான அட்மிட் கார்டுகள் தற்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. இந்த சூழலில், ஒரு வேடிக்கையான தவறு நடந்துள்ளது. ஒடிசாவில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தேர்வருக்கு வழங்கப்பட்ட அட்மிட் கார்டில் தென்னிந்திய நடிகை நயன்தாராவின் படம் இடம்பெற்றுள்ளது.
அந்த இடத்தில் தேர்வரின் புகைப்படம் இருக்க வேண்டும் என்பதால் மாணவரும் அவரது பெற்றோரும், கவலையில் உள்ளனர். புகைப்படம் மாற்றப்படாவிட்டால், அவர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார். இந்தத் தவறை மாணவரால் எதுவும் செய்ய முடியாது.
மொரட்டு சிங்கிள்ஸ்க்கு ‘கருப்பு’ தோசை… காதலர் தினத்தில் எங்கே கிடைக்கும் இந்த ஸ்பெஷல் தோசை?
மயூர்பஞ்ச் மாவட்டத்தின், பைசிங்காவில் உள்ள ரகுநாத் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிஜித் கபாட் என்ற பத்தாம் வகுப்பு மாணவரின் ஹால்டிக்கெட்டில் தான் இந்தத் தவறு ஏற்பட்டுள்ளது. தவறான புகைப்படத்தைத் தவிர, அட்மிட் கார்டில் உள்ள மற்ற எல்லா தகவல்களும் சரியானவை தான்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.