'காதல் சலிப்பு தட்டினால் கல்யாணம்' இது நடக்குற காரியமா?

இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க

இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க

author-image
WebDesk
New Update
Nayanthara and Vignesh Shivan

Nayanthara and Vignesh Shivan

நடிகைகள் பொதுவாக துவக்கக் காலங்களில் கவர்ச்சி காட்டி, ஓரளவு மார்க்கெட் ஸ்டெடி ஆனவுடன், தங்களுக்கு பிடித்த, பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பது வழக்கம். நயன்தாராவும் அதே வழிதான். ஆனால், இவருக்கு மற்ற முன்னணி நடிகைகளுக்கு இல்லாத ஒரு தனி ஸ்பெஷல் இருக்கிறது. அது ரசிகர் பலம் என்றோ, கதைத் தேர்வு என்றோ, ஆக்ஷன் பிளாக் ஒர்க் அவுட் ஆகிறது என்றோ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

Advertisment

ஏனெனில், கிட்டத்தட்ட ஒரு 2-ம் தர மார்க்கெட் தமிழ் ஹீரோக்களுக்கு இணையான ஓப்பனிங் நயனுக்கு மட்டுமே கிடைக்கிறது. தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையும் இவர் தான்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் – மாப்பிள்ளை இவர் தான்

ஏற்கனவே இரண்டு தடவை காதல் முறிவை சந்தித்து 3-வது முறையாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். இருவரும் வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு மகிழ்கிறார்கள்.

Advertisment
Advertisements

publive-image

இவர்களது திருமணம் பற்றி அவ்வப்போது வதந்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.

’இவ என்ன சொக்குப்பொடி போட்டாளோ?” என்னாச்சு காதம்பரிக்கு?

இதுகுறித்து அவர், "இணையதளத்தில் எங்களுக்கு 22 முறை திருமணம் பண்ணி வச்சுட்டாங்க. மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது எங்களுக்கு திருமணம் பண்ணி வச்சிருவாங்க. எங்களுக்கு சில நோக்கங்கள் இருக்கு. அதை முடிக்கணும், இதை முடிக்கணும்னு சில பிளான் இருக்கு. அதை முடிச்சுட்டுதான் பர்சனல் லைப்புக்கு வரணும்னு நினைச்சோம்.

தற்போது எங்கள் கவனம் முழுவதும் வேலையில தான் இருக்கு. லவ் எப்ப போர் அடிக்குதுனு பார்ப்போம், அப்ப கல்யாணம் பண்ணிக்கலாம். அந்த நேரம் வரும்போது எல்லோருக்கும் கண்டிப்பா தெரியப்படுத்துவோம்” என்று தெரிவித்துளளார்.

விடுங்கப்பா அவங்கள!!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Vignesh Shivan Nayanthara

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: