‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் – மாப்பிள்ளை இவர் தான்

Pandian Stores Chithra: சித்ராவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக சமீபத்தில் ஒரு நேரலையில் அவர் கூறியிருந்தார்

By: August 25, 2020, 9:10:20 PM

Pandian Stores Chitra Engagement: விஜய் டிவியில் வெளியாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சித்ரா. இவருக்கும் தொழிலதிபர் ஹேமந்த் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடனமாடி புகழ் பெற்றவர் சித்ரா. இவர் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவருக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். இதில் மூன்று நாயகிகள் இருந்தாலும், முல்லை – கதிர் ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம்.

பெரும் ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கும் சித்ரா தனது ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிறார். இவரது ரசிகர்களின் பிறந்தநாளுக்கு நேரில் சென்று ரசிகர்களை மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

’இவ என்ன சொக்குப்பொடி போட்டாளோ?” என்னாச்சு காதம்பரிக்கு?

லாக்டவுனுக்கு பிறகு பல சீரியல்களிலும் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எந்த மாற்றம் செய்யப்படவில்லை. இதனால் வழக்கம் போல அந்த சீரியலுக்கு நல்ல டிஆர்பி கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சித்ராவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக சமீபத்தில் ஒரு நேரலையில் அவர் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல இப்போது சித்ராவின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடந்தது.

‘நீ போட்ட கணக்கு எல்லாமே தப்பு’: பலிக்குமா மாயாவின் திட்டம்?

எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மாப்பிள்ளை பெயர் ஹேமந்த். இவர் ஒரு தொழிலதிபர். நிச்சயதார்த்தம் முடிந்திருந்தாலும், திருமண தேதி இதுவரை நிச்சயிக்கப்படவில்லை.

.தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Pandian stores serial actress chitra engaged hemanth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X