scorecardresearch

சமூக விஷயங்களுக்கு மட்டும் ஆஜராகும் நயன் : அடுத்து என்ன அரசியல் பிரவேசமா?

பொதுவாக, தான் நடிக்கும் படங்களின் ஆடியோ லாஞ்ச், புரோமோஷன் உள்ளிட்ட எதற்கும் தலைக்காட்டாதவர் நயன்தாரா.

Nayanthara Political Entry
Nayanthara Political Entry

Nayanthara : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா, தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முக்கியமானவர். பல முன்னணி ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ள நயன்,  கதாபாத்திரம் சார்ந்த படங்களையே தேர்வு செய்கிறார். தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அம்மனாக தோன்றினார் நயன். இந்நிலையில் நேற்று சென்னையில் நடந்த சர்வதேச மகளிர் தின விழாவில் ஸ்டைலாக கலந்துக் கொண்டார்.

வண்டி ஓட்டி, தண்ணிக்குள் நடந்த உற்சாக ரஜினி : மேன் Vs வைல்ட் டீசர்!

விழாவின் ஒரு பகுதியாக, வருமான வரித் துறையுடன் இணைந்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு மகளிர் கல்லூரிகளின் பேரணி நடைபெற்றது. ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சி கல்லூரி சாலையில் இருந்து எதிராஜ் சாலை வழியாக தொடர்ந்து, நுங்கம்பாக்கத்தில் முடிந்தது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நயன்தாரா, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பொதுவாக, தான் நடிக்கும் படங்களின் ஆடியோ லாஞ்ச், புரோமோஷன் உள்ளிட்ட எதற்கும் தலைக்காட்டாதவர் நயன்தாரா. இதனால் பல தயாரிப்பாளர்களும் அவர் மீது கோபத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இதற்கிடையே சில வருடங்களுக்கு முன்பு வெளியான ‘அறம்’ படத்திற்காக, நயன்தாரா தியேட்டர் விசிட் அடித்தபோது, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. சமூக அவலங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் மதிவதனி என்ற மாவட்ட ஆட்சியராக நடித்திருந்தார் நயன்தாரா. படம் மக்களுக்கு சென்று சேரும் நோக்கில் தானே முன்வந்து புரொமோஷனில் இறங்கினார். படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று, நயனுக்கு பல விருதுகளைப் பெற்று தந்தது.

பேராசிரியர் அன்பழகன்: விடைபெற்ற போதும் விலகாத எளிமை

இந்நிலையில் தற்போது சத்தமில்லாமல் சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கெடுத்திருக்கிறார். ஏற்கனவே அவர் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. சமூக விஷயங்களில் நயன் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால், அது நிஜமாகி விடுமோ? எனவும் சிந்திக்க வைக்கிறது. சரி… நடப்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Nayanthara womens day celebration political entry