Rajinikanth : ‘தர்பார்’ படத்தையடுத்து, ’அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இயக்குநர் சிவா இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முக்கிய நடிகைகள் நடிக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
காதல் பாட்டு… ரொமாண்டிக் அமலா பால்… வைரல் வீடியோ
இதற்கிடையே டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற நிகழ்ச்சியான, ‘இன் டூ த வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ மூலம் தொலைக்காட்சியிலும் அறிமுகமாகிறார் ரஜினி. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் ரஜினியும் பங்கேற்றதை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்க, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
Superstar @Rajinikanth’s relentless positivity and never giving up spirit was so visible in the wild as he embraced every challenge thrown at him. Respect! Watch Into The Wild with @BearGrylls on March 23 at 8:00 pm. @DiscoveryIN #ThalaivaOnDiscovery pic.twitter.com/s9PodYGv05
— Bear Grylls (@BearGrylls) March 9, 2020
ஜனவரி மாதம் படப்பிடிப்பு நடந்ததையடுத்து, ‘மேன் Vs வைல்ட்’ நிகழ்ச்சியின் மோஷன் போஸ்டர், ப்ரோமோ ஆகியவை வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் டீசரும் வெளியாகியிருக்கிறது. ”சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்பு வைக்கப்பட்ட ஒவ்வொரு சவாலையும், விட்டுக் கொடுக்காமல் பாஸிட்டிவாக ஏற்றுக் கொண்டார். ரெஸ்பெக்ட்!” எனப் பதிவிட்டு இந்த டீசரை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பியர் கிரில்ஸ்.
டீசரைப் பார்க்கும் போது ரஜினியின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தை ஸ்டைலாக ஓட்டி வருகிறார். கயிறை பிடித்துக்கொண்டு மரம் ஏறுகிறார். ஆற்றில் இறங்கி மார்பளவு தண்ணீரில் நடக்கிறார். பின்பு தனக்கே உரிய ஸ்டைலில் கூலிங் கிளாஸை சுற்றி சுற்றி போடுகிறார். ரஜினிகாந்த் எந்தளவுக்கு என்ஜாய் செய்திருக்கிறார் என்பதை இந்த டீசரிலேயே தெரிந்துக் கொள்ள முடிகிறது.
கொரொனா தாக்கம் : வலிமை படக்குழுவின் அடுத்த பிளான்
டீசரே இப்படியென்றால் மார்ச் 23, இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் மெயின் பிக்சர் எப்படியிருக்கும் என, ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Rajinikanth into the wild with bear grylls teaser