பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் தனம், தனது கொழுந்தனார்களுக்காக குழந்தைப் பெற்றுக் கொள்ளாமல் இருக்கிறாள். இந்த விஷயம் அவள் கணவர் மூர்த்திக்கு மட்டும் தான் தெரியும். அவளின் கொழுந்தனார்களான ஜீவாவுக்கு மீனாவுடனும், கதிருக்கு முல்லையுடனும் திருமணம் ஆகிறது. இப்போது மீனா கர்ப்பமாக இருக்கிறாள். இன்னும் மூன்று மாதம் ஆகவில்லை. இந்த விஷயம் குடும்பத்தில் இருக்கும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியை மலரச் செய்கிறது. எல்லோரையும் விட சற்று அதிகமாகவே மகிழ்ச்சியாகிறாள் தனம். இந்த குடும்பத்துக்கு முதல் வாரிசு வரப் போகிறது என்று அனைவரும் ஆனந்தமாகிறார்கள்.
Advertisment
Advertisements
இதற்கிடையே பாத்ரூமுக்கு சென்று வந்த மீனா, முகத்தில் ஒரு வித கலக்கத்துடன் தனக்கு ரத்தப் போக்கு ஏற்படுவதாக சொல்கிறாள். அங்கு அனுபவ பூர்வமாக இதனை உணர்ந்தவர் மீனாவின் மாமியார் மட்டுமே. ஆனால் அவர் அந்த காலத்து ஆள், அப்போது இப்படியெல்லாம் ஒரு விஷயத்தை அவர் கேள்வி பட்டிருக்கவில்லை. ஆகையால் ஏதோ தவறு நடந்து விடப் போகிறது என மொத்த குடும்பமும் கவலையில் மூழ்குகிறது. மருத்துவருக்கு ஃபோன் செய்தால், அவர் ஊரில் இல்லை என்று அடுத்தநாள் வரச் சொல்கிறார்.
அடுத்தநாள் மருத்துவர் என்ன சொல்வாரோ என ஒரு வித பதற்றத்துடனேயே மீனா - ஜீவாவுடன், தனமும் முல்லையும் செல்கிறார்கள். ஸ்கேன் எடுத்துப் பார்த்த மருத்துவர் குழந்தை நன்றாக இருப்பதாகவும், இப்போது இருக்கும் பெண்களுக்கு இப்படி ரத்தப் போக்கும் வருகிறது, பயப்படத் தேவையில்லை என்று சொல்கிறார். பயந்துக் கொண்டிருந்தவர்கள் மனதில் அப்படியொரு மகிழ்ச்சி. வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னதும் மற்றவர்களும் மகிழ்ந்து போகிறார்கள்.