Pandian Stores Serial : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், பெரும்பாலான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கொஞ்சம் ‘ஆனந்தம்’ படம் போல இருந்தாலும், இந்த கதை சின்னத்திரைக்கு சற்று புதிது என்றே சொல்லலாம்.
தம்பிகள் தான் முக்கியம் என்ற மூர்த்தியின் முடிவால், தனம் குழந்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. கால ஓட்டத்தில் மூர்த்தியின் தம்பிகள் வளர்ந்து, இரண்டு தம்பிகளுக்கு கல்யாணமும் ஆகிறது. கடைக்குட்டி கண்ணன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். மூர்த்தியின் மூத்த தம்பி ஜீவா, தான் காதலித்த மீனாவை கரம் பிடிக்கிறான். இந்தத் திருமணத்தை மீனாவின் வீட்டில் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையே மீனா கர்ப்பமாகிறாள்.
Advertisment
Advertisements
3 மாதம் முடியாமல் கர்ப்பமான விஷயத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார் ஜீவாவின் அம்மா. இதை சொன்னாலாவது அந்த சந்தோஷத்தில் நம்மை ஏற்றுக் கொள்வார்களே என்ற ஏக்கம் மீனாவுக்கு. ஒரு வழியாக தனமும், மூர்த்தியும் அவள் வீட்டிற்கு சென்று விஷயத்தை சொல்ல தயாராகிறார்கள். அதற்குள் மீனா கர்ப்பமாகியிருக்கும் விஷயம் கோயில் பூசாரி மூலமாக, அவள் குடும்பத்துக்கு தெரிய வருகிறது. யாரோ ஒருத்தர் சொல்லித்தான் எங்களுக்கு தெரிய வேண்டுமா என கோபமாகிறார்கள் மீனாவின் குடும்பத்தார்.
இருப்பினும், தனமும் மூர்த்தியும் மீனா வீட்டிற்கு செல்ல, அவர்களை அவமானப்படுத்தி அனுப்புகிறார் அவளின் அப்பா. ”எப்போதுமே மற்றவர்களைப் பற்றியே யோசிக்கிறியே, ஒருநாளாச்சும் உன்ன பத்தி யோசிக்கிறியா, உன்னால கஷ்டப்படுற எங்கள பத்தி யோசிக்கிறியா” என தனத்தின் அம்மா கோபமாகிறார். இதைக் கேட்ட கதிருக்கு கோபம் கொப்பளிக்கிறது. அவங்க ஏன் இப்படியெல்லாம் பேசுறாங்க, என முல்லையிடம் கேட்க, அதன் காரணத்தை அவள் கூறுகிறாள். ”அடடா நமக்காக அண்ணி இவ்ளோ தியாகம் பண்ணிருக்காங்களா” என உணர்ச்சி வசப்படுகிறான் கதிர்.