இண்டிகோ, ஏர் இந்தியா தடை விதித்த காமெடியன் குணால் கம்ரா யார்?
2018 ஆம் ஆண்டில், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் அன்னை தெரசா மீதான அவரது ‘நகைச்சுவைகள்’ வைரலாகியதை தொடர்ந்து, கம்ரா தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார்
2018 ஆம் ஆண்டில், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் அன்னை தெரசா மீதான அவரது ‘நகைச்சுவைகள்’ வைரலாகியதை தொடர்ந்து, கம்ரா தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார்
பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா, மும்பையில் இருந்து லக்னோ சென்ற இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது சக பயணியாக பயணம் மேற்கொண்ட பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக திட்டிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் குணால் கம்ரா.
Advertisment
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், கம்ராவின் இந்த நடத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளனர். இது குறித்து கம்ராவிடம் கேள்விகள் எழுப்பிய போது, 'நான் மிகவும் பணிவாகவே அர்னாபிடம் கேள்விகள் கேட்டேன். அவருடைய ஜோர்னலிசம் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை அவரிடம் விளக்கினேன். ஆனால் சில நிமிடங்கள் விமான பணிப்பெண் என்னை என்னுடைய இருக்கைக்கு செல்லுமாறு கூறினார். நான் மறுப்பு ஏதுமின்றி என்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தேன். நான் அந்த விமானத்தில் பயணித்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டேன். விமானிகளிடமும் மன்னிப்பு கேட்டேன் என்று கூறியுள்ளார்.
கம்ரா, அரசியல்-நகைச்சுவை நிகழ்ச்சியான 'ஷட் அப் யா குணால்' மூலம் பிரபலமானவர். அங்கு பத்திரிகையாளர் ரவீஷ் குமார், எம்.பி. அசாதுதீன் ஒவைசி, கன்ஹையா குமார், உமர் காலித், ஷெஹ்லா ரஷீத், எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மற்றும் இப்போது சிவசேனா தலைவர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட விருந்தினர்களுடன் பேசியுள்ளார்.
2018 ஆம் ஆண்டில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் ஒரு பத்திரிகையாளரோ அல்லது மாற்றத்தைக் கொண்டுவர விரும்பும் ஆர்வலரோ அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். "நான் ஒரு கன்டென்ட் கிரியேட்டர்… இது எல்லாம் நல்ல கன்டென்ட் தான். மற்ற விஷயங்களை விட இது மிகவும் வேடிக்கையானது, ஏனென்றால் எனது கருத்துக்களை வெளிகாட்ட நான் விரும்புகிறேன், அவை வெளிப்படையாக சார்புடையவை" என்று குறிப்பிட்டு இருந்தார்.
கம்ரா செய்திகளில் அடிபடுவது இது முதல் முறை அல்ல. கடந்த வாரம் டெல்லியில் ஷாஹீன் பாக் நகரில் நடந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு பேசிய போது, "நான் இங்கு பேசுவதற்கு அதிகம் தயாராக வரவில்லை. ஆனால் என்னை விட குறைவாகவே தயாராகி மோடி அரசாங்கம் CAA ஐ அறிமுகப்படுத்தியுள்ளது" என்றார்.
தனது நிகழ்ச்சிகளில் அப்பட்டமான அரசாங்க விரோத வர்ணனைக்கு பெயர் பெற்ற கம்ரா சமீபத்தில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சஷி தரூருடன் ‘ஒன் மைக் ஸ்டாண்ட்’ என்ற பெயரில் ஸ்டான்ட் அப் நகைச்சுவை நிகழ்ச்சில் கலந்து கொண்டார்.
2018 ஆம் ஆண்டில், முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் அன்னை தெரசா மீதான அவரது ‘நகைச்சுவைகள்’ வைரலாகியதை தொடர்ந்து, கம்ரா தனது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டார். அதே நேரத்தில், அவரது அரசியல் கருத்துக்களுக்காக மும்பையின் சிவாஜி பூங்காவில் உள்ள அவரது குடியிருப்பை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவர் தனது வீட்டு உரிமையாளருடன் நடத்திய உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து கொண்டார்.
2018 இல் குறைந்தது இரண்டு முறை, குஜராத்தில் கம்ராவின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. ஆகஸ்ட் 3, 2019 அன்று, சூரத்தில் நடைபெறவிருந்த அவரது நிகழ்ச்சிக்கு சில மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வதோதராவின் எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. பல்கலை., துணைவேந்தர் 11 முன்னாள் மாணவர்களிடமிருந்து பெற்ற கடிதத்தில் அவரது கன்டென்ட் “தேச விரோதம்” என்று குறிப்பிடப்பட்டிருந்ததை அடுத்து நிகழ்ச்சி ரத்தானது.
2017 ஆம் ஆண்டில், கம்ரா 'தேசபக்தி மற்றும் அரசு’ என்ற தனது முதல் ஸ்டான்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்காக மிரட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.