scorecardresearch

2 கதை தயார்: இயக்குநர் அவதாரமெடுக்கும் பார்வதி!

ஒன்று உளவியல் த்ரில்லராகவும், மற்றொரு படம் அரசியல் பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

2 கதை தயார்: இயக்குநர் அவதாரமெடுக்கும் பார்வதி!

Parvathy Directorial Debut: ‘பூ’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி. இதையடுத்து சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களில் நடித்தார். மனதில் பட்டதை வெளியில் பேசுவதற்கு பெயர் போனவர் பார்வதி. சமூக ஊடகங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், தனது கருத்துக்களுக்கும், பிரச்னைகளில் தைரியமான நிலைப்பாட்டிற்கும் பெயர் பெற்றவர்.

அட… நம்ம ராதிகா சரத்குமார் ஸ்கூல் சீருடையில்!

இந்த லாக்டவுனில் நடிகைகள் பலரும் வீட்டிலிருந்து, தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவதோடு, சமைப்பது, உடற்பயிற்சி செய்வது என தங்களுக்கு பிடித்த பல செயல்களை செய்து பொழுதினை போக்கிக்கொண்டிருக்க, பார்வதி தன்னை வேறு வழியில் கூர் தீட்டியிருக்கிறார்.

ஆம்! அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், தான் அடுத்ததாக திரைப்படங்களை இயக்கத் தயாரகி விட்டதாகக் கூறியுள்ளார். இந்த பூட்டுதல் கட்டத்தில் இரண்டு ஸ்கிரிப்ட்களை எழுதியுள்ளாராம். அதில் ஒன்று உளவியல் த்ரில்லராகவும், மற்றொரு படம் அரசியல் பொழுதுபோக்காகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

சூடா, சுவையா, வெட்டுக்கிளி ஃப்ரை ரெடி! அசத்தும் ராஜஸ்தான் உணவகங்கள்…

பார்வதியின் இந்த இரண்டு திரைப்படங்களைப் பற்றிய அறிவிப்பும் லாக்டவுன் முடிவுக்கு வந்த பிறகு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Parvathy thiruvothu to make her directorial debut soon