Contractor Neasamani : 18 வருடங்கள் கழித்து ஒரு படத்தின் காமெடி கேரக்டர் உலகளவில் ட்ரெண்டாகிறது என்றால் அது வடிவேலு வாழ்க்கையில் மட்டுமே சாத்தியம். சினிமாவை விட்டு அப்ப அப்ப விலகி இருந்தாலும் ரசிகர்களையும் வடிவேலுவையும் அவ்வளவு சீக்கிரத்தில் யாராலையும் பிரிக்க முடியாது என்பதற்கு நேற்று மாலை முதல் சோஷியல் மீடியாவில் நடந்து வரும் நிகழ்வு மற்றொரு சான்று.
ஹர்பஜன் சிங்கையும் கலங்கடித்த ’காண்ட்ராக்டர் நேசமணி’!
யாருயா அந்த நேசமணி? எனக்கே அவர பாக்கனும் போல இருக்கு, தி நேஷன் வாண்ட்ஸ் நோ, யய்யா சாமி நேசமணி நீ நல்லா இருக்கியாயா ஆத்தா வந்துருக்க பாருய்யா இதுஎல்லாமே ட்விட்டரில் #prayfornesamani என்ற ஹாஷ்டேக்கில் நடந்து வரும் கூத்துக்கள்.
மீம்ஸ்களின் மன்னனாக, மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு குருநாதாவாக வாழ்ந்து வரும் வடிவேலுவின்ன் காண்ட்ராக்டர் நேசமணி என்ற கேரக்டர் இன்று உலகம் முழுவதும் ஃபேமஸ். சுத்தியலை தமிழ்நாட்டில எப்படி கூப்பிடுவீங்கன்னு யாரோ கேட்ட ஒரு கேள்விக்கு, பதில் சொல்ல ஜமீன் பங்களா, காண்ட்ராக்டர் நேசமணி, அவரின் சித்தப்பா பையன் கிருஷ்ணமூர்த்தி என மொத்த பிரண்டஸ் பட கதையும் இளைஞர் சொல்ல போயி இன்று அதுவே ட்ரெண்டாகி நிற்கிறது.
எந்த பக்கம் திரும்பினாலும் நேசமணி குறித்த பேச்சு தான். பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என யாரும் விட்டு வைக்கவில்லை. சொல்லப்போனால் இன்று பிரதமர் மோடி பதவியேற்பு விழாவைக் காட்டிலும் நேசமணி குறித்த பேச்சு தான் அதிகம். அவருக்கு என்ன ஆனது, மருத்துவமனையில் இருக்கிறாரா? இது விபத்தா இல்லை திட்டமிட்ட கொலையா? இந்த வழக்கை யாரு விசாரிப்பார்? நேசமணிக்காக மோடி பதவிஏற்பு விழாவை தள்ளி வைப்பாரா?ன்னு கொஞ்சம் ஓவரா தான் போறோமா? என்ற அளவுக்கு ட்விட்டர் பக்கமே வெடவெடுத்து போயுள்ளது.
நேற்று இரவு முதல் இவ்வளவு அக்கப்போர் நடந்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயம் வடிவேலுக்கு தெரியவே இல்லை என்பது மற்றொரு தகவல். செய்தியாளர் அவரை தொடர்புக் கொண்டு கேட்டப்போது தான் மனிஷனுக்கு விஷயமே தெரியுது.தொடர்ந்து செய்தியாளர் இதைப்பற்றி கேட்க மனசலு பட்டத அப்படியே கண்கலங்கி மனிஷன் சொல்லி இருக்காரு.
நேசமணியை டிரெண்டிங் செய்த இளைஞர் யார் தெரியுமா?
“இத்தனை வருஷம் கழித்து நேசமணி கேரக்டர் ட்ரெண்டாவது ஆண்டன் எனக்கு அளித்த பரிசு” என்று கூறினார். அவரின் குடும்பத்தில் துயரம் நடந்த சோகத்தில் இருக்கும் வடிவேலு தன்னை பற்றி உலகமே பேசிக் கொண்டிருக்கிறது என்பது கூட தெரியாமல் இப்படி அப்பாவியாக இருப்பதை ரசிகர்கள் கேட்டு உருகி உள்ளனர்.