Raghava Lawrence : இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடங்கிய காலத்திலிருந்தே இயக்குநரும் நடிகருமான ராகவா லாரன்ஸ், மக்களுக்கு பல வழிகளில் உதவி வருகிறார். பல்வேறு பிரிவுகளின் நலனுக்காக 4 கோடிக்கும் அதிகமாக செலவிட்டார். கொரோனா நெருக்கடியின் ஆரம்ப கட்டங்களில், ஃபைவ் ஸ்டார் குரூப் கதிரேசன், தயாரிக்கும் படத்தின் அட்வான்ஸ் பணத்திலிருந்து, சுகாதாரத் தொழிலாளர்களின் நலனுக்காக, ரூபாய் 25 லட்சம் தருவதாக அறிவித்தார்.
சன் டிவி, கண்மணி : முத்த சண்டையில் கிரேட் எஸ்கேப்…
இந்நிலையில், தூய்மையின் முக்கியத்துவம் மற்றும் சுகாதாரத் தொழிலாளர்கள் கடவுள் போன்று சிறப்பானவர்கள் என, ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஃபைவ் ஸ்டார் கதிரேசனிடமிருந்து தூய்மைப் பணியாளர்களின் வங்கி கணக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட பட்டியலையும் இணைத்துள்ளார். அதன்படி, தூய்மை பணியாளர்களின் வங்கிக்கணக்கில் 25 லட்சத்து 38 ஆயிரத்து 750 ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதனால் 3,385 தூய்மை பணியாளர்கள் பயனடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாவில் ஒரு கலக்கு கலக்கும் பாவனா.. டான்ஸ், சிங்கிங் எதையும் விடல
முன்னதாக, நடிகர் ராகவா லாரன்ஸ் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சமும் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”