Read More: Saamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை!
Saamy Square ரிலீஸ்:
ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் மீண்டும் களமிறங்கியிருக்கும் சாமி 2 படம் நாளை மறுநாள் (21-09-2018) தமிழகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. விக்ரமிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.
Read More: Saamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா?
2003ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம், திரிஷா, மனோரமா, கோட்டா சீனிவாசராவ், விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் சாமி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் சாதனை புரிந்தது.
Read More : நான் சாமி இல்ல… பூதம்!!! சாமி 2 டிரெய்லர் வெளியீடு குறித்த செய்திக்கு!
இதன் இரண்டாம் பாகம் உருவாக்கம் தற்போது நிறைவடைந்து 21ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இப்படத்திற்காக தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனைகள் நாளை முதல் தொடங்குகிறது. விக்ரம் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்திற்காக ஆர்வமாக காத்திருக்கின்றனர்.