Samantha Akkineni: சென்னையில் பிறந்து வளர்ந்த சமந்தா, 2010ல் வெளிவந்த ‘மாஸ்கோவின் காவிரி’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தெலுங்கில் பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். பின்னர் தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து விஜய், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
தமிழகத்தில் குறையும் கொரோனா தொற்று விகிதம்
சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட பெஸ்ட் டின்னர் இல்லை..அடை தோசை!
தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துக் கொண்ட சமந்தா, தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இருப்பினும் புதிதாக வேறெந்த படங்களிலும் கமிட்டாகாத அவர் தற்போது, தொழிலதிபராக உருவெடுத்துள்ளார். ஆம் ஃபேஷனில் கலக்கி வரும் சமந்தா, தற்போது ஒரு ஃபேஷன் டிசைனராக மாறி சொந்த நிறுவனம் ஒன்றையும் தொடங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய சமந்தா, “எனக்கு ஸ்டைலான ஆடைகளை உடுத்த மிகவும் பிடிக்கும். ரசிகர்கள் ஸ்டைல் நடிகை என்றால் சமந்தாவை சொல்லலாம் என்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே உடை விஷயத்தில் பிரத்யேக முக்கியத்துவம் கொடுக்க காரணம் பேஷன் மீது எனக்கு இருக்கும் இஷ்டம் தான். அந்த விருப்பத்தை நான் சினிமாவோடு விட்டு விடாமல் பெண்களுக்கான உடை வடிவமைப்பாளராக மாறி பேஷன் டிசைன் நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளேன். இது எனது கனவு. சில மாதங்கள் முயற்சி செய்து இப்போது தான் அதனை நிறைவேற்றி உள்ளேன். பேஷன் துறையில் எனக்கு இருக்கும் காதல், மோகத்துக்கு இந்த தொழில் உதாரணமாக இருக்கும். நடிகையாகும் முன்பே பேஷன் துறையில் ஆர்வம் இருந்தது. தொழில் தொடங்கி இருக்கும் சந்தோஷத்தை எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”