/tamil-ie/media/media_files/uploads/2020/01/Samantha-Akkineni-Jaanu-Trailer.jpg)
Samantha Akkineni report card, samantha movies
Samantha Tweet : நடிகை சமந்தா தற்போது ’ஜானு’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.த்ரிஷா, விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96' படத்தின் தெலுங்கு பதிப்பாக இப்படம் உருவாகியிருக்கிறது. தமிழில் இப்படத்தை இயக்கிய பிரேம் குமாரே, தெலுங்கிலும் இதனை இயக்கியிருக்கிறார். சமந்தாவுக்கு ஜோடியாக, விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிகர் ஷர்வானந்த் நடித்திருக்கிறார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் நடித்தவர்.
சென்னை மெட்ரோவில் இத்தனை கோடி நஷ்டமா? : நம்ப முடியவில்லை
காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமந்தா மீது அளவுக் கடந்த அன்பு வைத்திருந்த ரசிகை ஒருவர், ஒரு நோட்டு புத்தகம் முழுக்க, ‘ஐ லவ் யூ சாம்’ என எழுதி அந்த வீடியோவை ட்விட்டரில் சமந்தாவுக்கு டேக் செய்திருந்தார். அதை எழுத தனக்கு 3 மணி 15 நிமிடம் ஆனதாகவும், தன் அம்மா திட்டியபோதிலும் எழுதுவதை கை விடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Oh gosh your mom must be angry with me .. Thankyou for your love but please study ????❤️ https://t.co/b9J3o5rWXu
— Samantha Akkineni (@Samanthaprabhu2) January 27, 2020
இந்தியன் வங்கி ஆட்சேர்ப்பு: 138 பணியிடங்கள் அறிவிப்பு
இதைப் பார்த்த சமந்தா வாயடைத்துப் போனார். ”உங்கள் அம்மா என் மீது கோபம் கொண்டிருப்பார். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி. தயவுசெய்து படியுங்கள்” என்று பதிலளித்திருந்தார். சமந்தா மீது இவ்வளவு அன்பா என அந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கேட்கத் தோன்றுகிறது...
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.