Samantha Akkineni : நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த '96' திரைப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. 'விண்ணைத்தண்டி வருயா' படத்திற்குப் பிறகு, த்ரிஷாவின் கரியரில் முக்கியப் படமாக இப்படம் கருதப்படுகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’ இந்த வாரம் வெளியானது. இதில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்திருக்கிறார்கள். படம் தெலுங்கு ரசிகர்களிடமும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், தனது திரை வாழ்க்கையில் மறக்க முடியாத ஜானு கதாபாத்திரத்தில் நடித்து முடித்த பிறகு, நடிப்புக்கு முழுக்குப் போட சமந்தா முடிவெடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
'96' பம் வெளியாகியிருந்த சமயத்தில் த்ரிஷாவின் நடிப்பில் மெய் சிலிர்த்த சமந்தா, அவருக்கு தனது அளவுக் கடந்த அன்பை ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதனால் தெலுங்கு ரீமேக்கில் த்ரிஷாவின் பாத்திரத்தில் நடிக்க அவர் மிக்க மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.
சமந்தா அளித்த பேட்டியில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நடிப்பிலிருந்து விலக தான் முடிவு செய்துள்ளதாக கூறினார். ஒரு நடிகையின் திரை ஆயுட்காலம் எப்போதுமே ஒரு நடிகரின் திரை ஆயுட்காலத்தை விடக் குறைவானது என்பதை சுட்டிக்காட்டிய சமந்தா, பெண் நட்சத்திரங்கள் சினிமாவை விட்டு வெளியேறியவுடன் ரசிகர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள்.
இருப்பினும், ’தான் நடிப்பிலிருந்து விலக முடிவு செய்யும் போது, தனது கடைசி படம் யாரும் மறக்க முடியாத வகையில் இருக்க வேண்டும்’ என்றார். ஆகையால் ஜானு படத்தில் தனது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கும் சமந்தா விரைவில் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொள்வார் என்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.