Ravi Varman's Paintings Recreation: நடிகைகள் குஷ்பூ, ஸ்ருதி ஹாசன், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ், நதியா, லட்சுமி மஞ்சு, நடனக் கலைஞர்களான ஷோபனா மற்றும் பிரியதர்ஷினி கோவிந்த் உள்ளிட்ட 9 பேரை வைத்து, ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு அட்டகாசமான படங்களை எடுத்துள்ளார் செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம்.
வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்திய பூனை; வியக்கும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ
தனி பெண்ணாக பல கடமைகளை செய்து வருபவர்களை மேம்படுத்தி கொண்டாடும் விதமாக, நடிகை சுஹாசினி மணிரத்னம் அவர்களின் ‘நாம்’ எனும் சமூக நலப்பணி மன்றத்திற்கு இந்த ஃபோட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.
"உங்களுடன் எப்போதும் சிறப்பாக பணியாற்றுவது மகிழ்ச்சி ... நாமிற்காக ரவி வர்மாவின் ஓவியங்களை பிரதிபலிக்கும் இந்த அர்த்தமுள்ள புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார் சமந்தா.
சமந்தா பிரதிப்பலித்த ஓவியம் இது தான்.
என்னால் மறக்கமுடியாத ஒன்றின் ஒரு பகுதியாக மாற்றியமைத்த சுஹாசினி அக்காவுக்கு நன்றி என தெரிவித்திருந்தார் ஸ்ருதி ஹாசன்.
நம்ப முடியாத அனுபவம்...
ராஜா ரவி வர்மாவின் படைப்புகளை மீண்டும் உருவாக்கிய திட்டத்தில் ரம்யா கிருஷ்ணனும் ஒருவர். "நாமிற்காக ரவி வர்மாவின் படைப்பை மீண்டும் உருவாக்குதல் ... இதனால் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன், இந்த அற்புதமான வாய்ப்பிற்கு நன்றி சுஹாசினி” என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த மேஜிக்கை மீண்டும் செய்ததற்கு நன்றி என ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் குஷ்பூ
அடடே நதியா அடையாளமே தெரியலையே
நடிகையும், நாட்டியக் கலைஞருமா ஷோபனா...
அர்த்தமுள்ள இந்த திட்டத்தில் நானும் இடம் பெற்றது மகிழ்ச்சி எனத் தெரிவித்திருக்கிறார் ஐஸ்வர்யா
இதில் தெலுங்கு நடிகை லட்சுமி மஞ்சூவும் இடம் பெற்றிருந்தார்.
எம் கே ஸ்டாலின் இனி பி கே ஸ்டாலின் – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்
”ராஜா ரவி வர்மா பெண்களைப் புரிந்துகொண்டதோடு, நான்கு பிரேம்களுக்குள் ஒரே பரிமாணத்தில் மிகச்சிறப்பாக பிரதிபலித்த சில இந்தியர்களில் முக்கியமானவராக இருந்தார், ஒவ்வொரு ஓவியமும், வண்ணமும், வாழ்க்கையை ஊக்கப்படுத்தும் படி அமைந்திருக்கும்” என இது குறித்துப் பேசினார் நடிகை சுஹாசினி.