scorecardresearch

ரசிகர்கள் மேல என்னா பாசம் பாருங்க… ஷிவானி ‘ஜிகிடி கில்லாடி’ டான்ஸ்

இந்த வீடியோ  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு  காட்சியமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Bigg Boss Tamil 4 Promo Shivani Narayanan
பிக் பாஸ் ப்ரோமோ

பிரபல பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டிவி நடிகை ஷிவானி நாராயணன் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். இந்நிலையில், ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகிடி கில்லாடி என்ற பாடலுக்கு நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக, பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர்கள், வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் கழிக்க வேண்டும். எனவே, இந்த வீடியோ  பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு  காட்சியமைக்கப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் ஷிவானியை 23 லட்சம் மக்கள் பின் தொடர்ந்து வருகிரார்கள். ட்விட்டரில் தமிழக முதல்வரை பின்தொடருபவர்களை விட இது மிகவும் அதிகம். ஷிவானி, தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் அவ்வப்போது வீடியோ, போட்டோக்களை பதிவிட்டு வருபவர். குறிப்பாக, சமீப காலமாக சினிமா பாடல்களுக்கு நடனமாடும் வீடியோவை பதிவிட்டு வருகிறார். அந்த, வகையில் தற்போதைய வீடியோவை அவரது அட்மின் வெளியிட்டிருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

♥️ # teamshivaninarayanan #bigbosstamilseason4

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

 

முன்னதாக,  தனுஷ், சாய் பல்லவி நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற’ ரவுடி பேபி’ என்ற பாடலுக்கு ஷிவானி நடனமாடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டிருந்தார்.    ‘

மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில்  வெளியாக  இருக்கும் சூரரைப் போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடி அசத்தினார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Shivani narayanan teamshivaninarayanan bigbosstamilseason4

Best of Express