/tamil-ie/media/media_files/uploads/2019/06/shruti-haasan.jpg)
happy birthday shruti haasan
Happy Birthday Shruti Haasan : அப்பா / அம்மாவை போல குழந்தைகளும் திறமையாக இருப்பார்கள் என்ற விதி பல இடங்களில் பொருந்தாது. இன்னும் சில குழந்தைகளோ, பெற்றோர்களையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு, பன் மடங்கு திறமைகளை தங்களுக்குள் வைத்திருப்பார்கள். அந்த வகையில் சினிமாவில் புது புது முயற்சிகளை கையாண்டு இந்திய சினிமாவுக்கே பல தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் நடிகர் கமல் ஹாசன்.
கோடீஸ்வரி நிகழ்ச்சியில் குட்டி ஜெயலலிதா! கைதட்டல்களால் அதிர்ந்த அரங்கம்!
இவருக்கு ஸ்ருதி ஹாசன், அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் இருக்கிறார்கள். இருவருமே அப்பாவுக்கு சமமாக பல திறமைகளை தங்கள் வசம் வைத்திருக்கிறார்கள். இதில் மூத்தவரான ஷ்ருதி, அடிப்படையில் பாடகி. பின்னர் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். அனைத்துத் திரையுலகிலும் தனக்கென ஓர் அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர், ஏராளமான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி, அதன் மூலம் தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து ஏராளமான பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-1-1024x682.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-3.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-2.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-4.jpg)
சி.ஏ.ஏ வரைவு : இந்தியாவில் குடியுரிமையை பெற மதத்தினை நிரூபிக்க வேண்டும்!
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-5.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2020/01/Shruti-Haasan-6-1024x520.jpg)
இன்று தனது 34-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் ஷ்ருதி ஹாசன். வெளிநாடுகளில் அடிக்கடி தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வரும் அவர், இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘லாபம்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.