scorecardresearch

பிக் பாஸ் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பாடகி சுசித்ரா?

“நான் பயந்துவிட்டதாகவும், வெளியே சென்றதாகவும் பரவும் தகவலை நம்ப வேண்டாம்.”

Singer Suchitra in Bigg Boss Tamil 4
Singer Suchitra in Bigg Boss Tamil 4

RJ Suchitra: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனாவுக்கு அடுத்தபடியாக வைல்ட் கார்ட் என்ட்ரியாக பின்னணி பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாகவும், அதற்காக அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

அப்பாவின் திருமணத்துக்கு பச்சைக் கொடி காட்டிய மூத்த மகள் கனி!

ஆனால் தற்போது நடந்துள்ள ஒரு சம்பவம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. நள்ளிரவில் ஹோட்டல் அறையிலிருந்து கதறியடித்துக் கொண்டு சுசித்ரா, வெளியில் ஓடி வந்ததாக செய்திகள் இணையத்தில் வெளியாகின. இந்நிலையில் இதற்கு தற்போது சுசித்ரா விளக்கமளித்துள்ளார்.

சீரியலில் அம்மா, நிஜத்தில் படு இளமையான நடிகை: பிரவீணா ப்ரமோத்!

தனது ஹோட்டல் ரூமில் இருந்து எடுத்த படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சுசித்ரா, ”சில தவறான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க இருக்கிறேன். எனது அறையில் நான் பயந்துவிட்டதாகவும், வெளியே சென்றதாகவும் பரவும் தகவலை நம்ப வேண்டாம். நான் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறேன். என்னை நன்கு கவனித்துக் கொள்கிறார்கள்” என்று அதில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுசித்ரா கலந்துக் கொள்வது உறுதியாகியுள்ளது.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Singer suchitra in bigg boss tamil 4 mirchi suchitra

Best of Express