பெரியார் குறித்து ரஜினி பேசியது கடந்த சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கும் நிலையில், அதிமுகவின் அமைச்சர்கள் ரஜினிக்கு சற்று கடுமையாக எதிர்க்கருத்துகளை முன்வைத்தனர்.
தேவதைகளுக்கு என்ன தெரியும் உன் அழகைப் பற்றி! – மடோனா செபாஸ்டியன் கியூட் புகைப்படங்கள்
குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “ரஜினி தனது இரண்டாவது மகளுக்கு எப்படி இரண்டாவது திருமணம் செய்து வைத்தார். பெரியார் தான் அதற்கு காரணம் என்பதை மறக்க கூடாது” என்று பேசிய சலசலப்பை ஏற்படுத்தியது.
தனது முதல் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு, பிரபல தொழிலதிபர் மகன் விசாகன் என்பவரை ரஜினி மகள் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
தந்தையை போலவே கடவுள் பக்தி அதிகம் கொண்ட சௌந்தர்யா, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் தருமையாதீனம் தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிப் பெற்றார்.
அடடே! சினேகாவுக்கு இரண்டாவது குழந்தையாம் – அதுவும் பெண் குழந்தை! பிரசன்னாவின் கியூட் ட்வீட்