நடிகை தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் 'பாய்ஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானனார். பிறகு சுனைனாவுடன் சேர்ந்து ’காதலில் விழுந்தேன்’ படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தொடர்ந்து மாசிலாமணி, கந்தகோட்டை, நான் ராஜாவாக போகிறேன், வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், நாரதன், செய், எரியும் கண்ணாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
’பாதை வேறு வேர் ஒன்று தான்’: அண்ணன்கள் குறித்து உருக்கமான சமந்தா!
நடிப்பு மட்டுமல்லாமல் அந்நியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், கந்தகோட்டை, வல்லினம், உள்ளிட்ட பல படங்களில் பின்னணி பாடகராகவும் பணியாற்றியிருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் vs டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
,
வின்வெளித்துறையில் தனியார் பங்கேற்க மத்திய அமைச்சரவை அனுமதி – இஸ்ரோ தலைவர் வரவேற்பு
இந்த லாக் டவுனில் தனது மனைவி ஸ்ருதியுடன் சேர்ந்து பாடும் கியூட் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடிய நகுல் அன்றைய தினத்தில், தனது மனைவி ஸ்ருதி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தையும் வெளியுலகுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் ஸ்ருதிக்கு வீட்டில் வளைகாப்பு நடத்திய புகைப்படங்ககளை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நகுல் "எனது மாமனார் குடும்பத்தினர் வீட்டிலேயே சிறிய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். நாங்களும் எங்கள் வீட்டு நாய்க்களும், பூனைகளும் மட்டும் கலந்துகொண்ட ஒரு மகிழ்ச்சியான தருணம் " என்று மிகுந்த சந்தோஷத்துடன் பதிவிட்டுள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”