/tamil-ie/media/media_files/uploads/2020/07/Sudeep-Adopts-4-government-schools-in-Karnataka.jpg)
கன்னட நடிகர் சுதீப்
தமிழில் ‘நான் ஈ' திரைப்படத்தில் வில்லனாக நடித்து கோலிவுட்டில் அறிமுகமானார் கன்னட நடிகர் கிச்சா சுதீப். எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கிய இந்த ஒரு படத்திலேயே தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு ‘பாகுபலி', விஜய்யின் ‘புலி' மற்றும் ‘முடிஞ்சா இவனை புடி' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
தனுஷின் அப்பாவுக்கு பாஜக-வில் முக்கியப் பொறுப்பு
கன்னட சினிமாவில் இயக்குநராகவும், நடிகராகவும், பின்னணி பாடகராக மிகவும் பிரபலமான சுதீப், அவரது ரசிகர்களால் ‘கிச்சா' என செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்த கொரோனா வைரஸ் காலத்தில், சமூகத்திற்கு பேருதவி செய்து வருகிறார். பொதுமுடக்கத்துக்கு மத்தியில் கொரோனாவை எதிர்த்துப் போராட பல குடும்பங்களுக்கு சுதீப்பின் அறக்கட்டளை உதவுகிறது.
தற்போது, கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் 4 அரசு பள்ளிகளை அவர் தத்தெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களுக்கு உதவுவதற்காக உதவித்தொகை திட்டங்களையும், ஆசிரியர்களின் சம்பளத்தை கவனித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு கல்வி செயல்முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இந்த பள்ளிகளில் கணினிகள் நிறுவும் பணியையும் சுதீப்பின் குழு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
தோனியுடன் பேட் செய்வதே எனக்கு ஈஸி – சவுத்பா பண்ட்
தவிர, ‘Phantom' படத்தின் படப்பிடிப்பை கொரோனா பிரச்னைகள் முடிந்ததும் தொடங்க உள்ளார் சுதீப். ’கோட்டிகோபா 3’, ’பில்லா ரங்கா பாஷா’ மற்றும் ’தக்ஸ் ஆஃப் மால்குடி’ ஆகியப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.