சன் டிவி-க்கு பைபை, விஜய் டிவி-க்கு ஹாய்! ஆதவன், மதுரை முத்து...
ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் காலப்போக்கில் வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் காலப்போக்கில் வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
விஜய் டிவியில் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று ’கலக்கப் போவது யாரு’. தற்போது இந்நிகழ்ச்சி புதுப்பொலிவுடன் ஒளிபரப்பாகவிருப்பதாக ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அதில் சன் நெட்வொர்க்கில் இருந்த ஆதவன், மதுரை முத்து ஆகியோருடன் ஈரோடு மகேஷ், ரம்யா பாண்டியன், வனிதா விஜயகுமார் என 5 பேரும் நடுவர்களாக அங்கம் வகிக்கவிருக்கிறார்கள். ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆதவன், மதுரை முத்து, ஈரோடு மகேஷ் ஆகிய மூவரும் காலப்போக்கில் வெவ்வேறு இடங்களில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். தற்போது மூவரும் இணைந்து மக்களை குஷிப்படுத்த இருக்கிறார்கள்.
ஆதித்யா டிவியில் ஆதவன் நடத்திய ’கொஞ்சம் நடிங்க பாஸ்’ பலருக்கும் பிடித்த ஒன்று. இதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களுக்கு பரீச்சயமான அவர், பின்னர் சன் டிவியில் முன்னணி நிகழ்ச்சித் தொகுப்பாளராக மாறினார். விழாக்கள், டீம் இண்டர்வியூ போன்ற ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை எல்லாம் தொகுத்து வழங்கினார்.
Advertisment
Advertisements
’அசத்தப் போவது யாரு?’ என்ற சன் டிவி-யின் நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தன்னை கூர் தீட்டிக் கொண்ட மதுரை முத்து, சன் டிவியில் கடந்த பல வருடங்களாக சண்டே கலாட்டா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தார். அதற்குப் பிறகு ஆதவனுடன் இணைந்து காமெடி ஜங்ஷன் நிகழ்ச்சியை வழங்கி வந்தார். இந்நிலையில் இவர்கள் இணைவருமே விஜய் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கிறார்கள்.
தவிர, விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மகேஷ், கலக்கப் போவது யாரு சீசன் 9 -ல் நடுவராக இனைந்துள்ளார். இவர்களுடன் ’குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்யா பாண்டியனும், பிக்பாஸ் மூலம் பிரபலமான வனிதா விஜயகுமாரும் இணைந்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி ஞாயிறு முதல் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் என ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது.