நக்‌ஷத்ரா நாகேஷ் சொல்லித்தரும் சைன் லாங்குவேஜ்!

சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூ-டியூப் சானல் ஆரம்பித்து பிசியாக இருந்து வருகின்றனர். நட்சத்திராவும் அதில் இருந்து தப்பவில்லை.

By: June 29, 2020, 7:55:02 PM

Nakshatra Nagesh : சன் டிவியின் புகழ்பெற்ற தொகுப்பாளினியாக இருந்தவர் நட்சத்திரா. கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக சன் டிவியில் பணியாற்றியவர். பிறகு இவர் குஷ்பூவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வழங்கிய லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமியாக நடித்து வந்தார். கதையின் படி ரவியும், லட்சுமியும் காதலர்கள்.

’இது முதல் முறையல்ல’: பாடகி எஸ்.ஜானகி மரணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி

இருவரும் சந்திக்கும் காட்சிகளில் ரொமான்ஸ் அள்ளும். இந்த ரொமான்ஸ் காட்சிகளுக்காக சீரியல் பார்த்தவர்கள் ஏராளம். ஒரு கட்டத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் இருவரின் ரொமான்ஸ் இல்லாமல் சீரியஸாக பயணிக்க ஆரம்பித்து இருந்தது. அப்போதெல்லாம், அம்மாவே என்ன ரொமான்ஸ் காட்சியே இல்லாமல் கதை சீரியசாக போயிகிட்டு இருக்கேன்னு கேட்டாங்க என்று நட்சத்திராவே சன் சிங்கர் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

பிறகு, இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வர, சன் டிவியின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் பணியிலிருந்து விலகி இருந்தார். ஆனால், அதற்குள் லாக்டவுன் அமலுக்கு வந்தது. இந்த வேளையில், சின்னத்திரை பிரபலங்கள் பலரும் யூ-டியூப் சானல் ஆரம்பித்து பிசியாக இருந்து வருகின்றனர். நட்சத்திராவும் அதில் இருந்து தப்பவில்லை. மேக்கப், சேலஞ் என்று அடிக்கடி வீடியோ வெளியிட்டு வரும் நட்சத்திரா, அண்மையில் சைன் லாங்குவேஜ் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கார்.

’அவர் மீது நடவடிக்கை எடுங்கள்’: பீட்டர் பால் மனைவி போலீஸ் கம்ப்ளைண்ட்

சைன் லாங்குவேஜ் என்பது வேறு ஒன்றும் இல்லை, சைகை மொழி. இந்த சைகை மொழியில் வெல்கம், தேங்க்யூ, ப்ளீஸ், சாரி என்று கேட்பதெல்லாம் எப்படி என்று சொல்லித் தருகிறார். பார்த்து கத்துக்கோங்க!

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sun tv lakshmi stores nakshatra nagesh youtube channel

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X