Sun TV Serial : லாக்டவுன் அமலில் இருக்கும் இந்த நேரத்தில் சன் டிவி 'ரோஜா' சீரியலை இரவு 7 மணிக்கு மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. ரோஜா சீரியல் கடந்த இரண்டு வருடமாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல். இந்த நேரத்தில் சீரியல் ஷூட்டிங் இல்லை என்பதால், குறிப்பிட்ட எபிசோடுகளில் இருந்து இந்த சீரியலை மறு ஒளிபரப்பு செய்து வருகிறது சன் டிவி.
ஆரம்பத்தில் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியல், அடுத்து இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இதையடுத்து இரவு 7 மணிக்கு என்று தொடர்ந்து ஒளிபரப்பு செய்து வந்தது. ரோஜா சீரியல் ரேட்டிங்கில் நல்ல இடத்தில் இருக்க, அதனை மேலும் உயர்த்த நடிகை நதியா கூட சில எபிசோடுகள் நதியாவாகவே வந்து போனார்.
Advertisment
Advertisements
ரோஜா சீரியலால்தான் சன் டிவியின் 7 மணி ஸ்லாட் மக்களால் விரும்பிப் பார்க்கப்படும் நேரமாக மாறியது. இதில் ரோஜாவாக நடித்து இருக்கும் பிரியங்கா ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்ற அதே நேரத்தில் நாயகனாக நடிக்கும் சிபு சோரன் ஆந்திராவை சேர்ந்தவர். இவருக்கும் ஏராளமான கல்லூரி பெண்கள் ரசிகைகளாக உள்ளனர். இப்படி ரோஜா சீரியல் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படுகிறது. வீட்டுக்குள் சீரியல் ஷூட்டிங் என்றாலும், மிக சுவாரஸ்யமான படப்பிடிப்பு என்று இயக்குனர் அசத்துகிறார். வசனங்கள் ரசித்து கேட்கும்படி இருக்கின்றன.
அர்ஜுன் வீட்டுக்கு தெரியாமல் ரோஜாவை ஒரு வருஷ கான்டிராக்ட் போட்டு திருமணம் செய்துக்கொண்டு வந்துவிடுகிறான். காண்டிராக்ட் விஷயம் வீட்டில் யாருக்கும் தெரியாது. இப்படி இருக்கும்போது ரோஜாவை பாட்டி அன்னபூரணி அம்மா ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், மகன் மருமகளுக்கு செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்ய வேண்டும் என்று அன்னபூரணி அம்மா மருமகள் கல்பனாவுக்கு விருப்பம். வேலைக்காரி சுமதி அக்காவிடம் சொல்லி செய்ய வேண்டியவற்றை செய்து விடுங்கள் என்று சொல்றாங்க. பாட்டிக்கு அதில் உடன்பாடு இல்லை...
வேலைக்காரி இந்த இடத்தில் தன்னோட பவரை காண்பிக்கிறது ரொம்ப நல்லாருக்கு. வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு, அதுக்கு செய்ய வேண்டிய சடங்கை செய்யாம இருக்க கூடாது பெரியம்மா... உங்களுக்கு பிடிக்கலேன்னா நீங்க ஒதுங்கிக்கோங்கன்னு வேலைக்காரி சொல்ல, ஏய்.. என்று ஒரு அதட்டல் போடறாங்க அன்னப்பூரணி. என்ன பெரியம்மா சத்தம் போடறீங்க... நீ ஒரு வேலைக்காரிதானே.. உனக்கு எதுக்கு அதிகப்பிரசங்கித் தனம்னு கேட்கறீங்களா? இந்த வீடு இல்லேன்னா எனக்கு வேற வீடு. வேலை செய்ய வீடா கிடைக்காதுன்னு சொல்ல. போடின்னு ஒதுங்கிக்கறாங்க அன்னபூரணி அம்மா. இப்படி வேலைக்காரி ராஜ்யம் பண்ண சுவாரஸ்யமா இருக்கு ரோஜா சீரியல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”