Sun TV Shows: 'ஸ்டார் வார்' என்று ஒரு ரியாலிட்டி ஷோ. இதை சன் டிவி லாக்டவுன் நேரத்தில், மறு ஒளிபரப்பு செய்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் பிரபலம் அபிராமி தொகுத்து வழங்கி இருக்கிறார். சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ், தொகுப்பாளர்கள் கலந்துக்கொண்டு விளையாடும் ஒரு ரியாலிட்டி ஷோ. இந்த ஷோவை ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஸ்டார்ஸ் அனைவரையும் கூட்டிச் சென்று, அங்கு வைத்து நடத்துவார்கள். சில நேரம் அந்த பகுதி மக்கள் இந்த ஷோவை வேடிக்கை பார்ப்பார்கள். சில நேரம் பார்வையாளர் யாரும் இல்லாமல் ஷோ நடக்கும். அபிராமி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்னர் சன் டிவியில் அபிராமி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி இது.
கொரோனா வைரஸ் : தமிழகத்தில் பாதிப்பு சமீபகாலமாக அதிகரித்தது ஏன்?
இந்த ஷோ பிக்பாஸ் வீட்டுக்கு அபிராமி சென்றவுடன், நாளடைவில் கிராமத்தில் ஒரு நாள் என்று மாறிப்போனது. ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு கிராமத்தில் ஒரு நாள் ஷோவை சன் டிவி ஒளிபரப்பி வந்தது. தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் இளம் நடிகைகள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள். போட்டிகள் ஒவ்வொன்றும் கடுமையாக இருந்தாலும், பார்ப்பவர் கண்களுக்கு குளு குளு என்று இருக்கும். காரணம், நடிகைகள் அவ்வளவு கவர்ச்சியாக உடை அணிந்து இருப்பார்கள். விளையாட்டு பார்த்தீர்கள் என்றால், சேற்றில் தவழ்ந்து, தண்ணீரில் நீந்தி விளையாடி போட்டியில் வெல்ல வேண்டும் என்பது போல இருக்கும். சன் டிவியின் கிராமத்தில் ஒரு நாள் நிகழ்ச்சியை மிட்நைட் ஷோ என்று கூறியவர்களும் உண்டு.
’உங்க கூட டச்ல இருக்கணும்’ : ட்விட்டருக்கு வந்த செந்தில்! கவர் ஃபோட்டோ என்ன தெரியுமா?
சரி, ஸ்டார் வார் ஷோ பற்றி பார்க்கலாம்.. இந்த ஷோவை தொகுத்து வழங்கி வந்த அபிராமிக்கு பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொள்ள வாய்ப்பு வந்ததும், பிக்பாஸ் சென்றுவிட்டார். பிக்பாஸில் இருந்து வந்த பிறகு சன் டிவியும் இவரை கூப்பிடவில்லை. பிக்பாஸ் வீட்டில் இவருடன் கலந்துக்கொண்ட மற்ற போட்டியாளர்களை அவ்வப்போது அழைத்து அழகு பார்த்த விஜய் டிவியும் அபிராமியை கூப்பிடவில்லை. பிக்பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு நேர்கொண்ட பார்வை, படத்தில் நடித்து முடித்து இருந்தார் அபிராமி. சரி அந்த படம் வெளிவந்த பிறகாவது படங்களில் வாய்ப்பு வரும் என்று காத்திருந்த அபிராமிக்கு ஏமாற்றமே. நல்ல உயரம், நெளிநெளியான முடி என்று அபிராமி அழகாக இருப்பார். ஏனோ இவருக்கும், மதுமிதாவுக்கு பிக்பாஸ் இல்லத்தில் ஒத்துப்போகவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”