'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்' சீரியலில் ஆனது ஆகிப்போச்சு, ஆஸ்பத்திரியிலும் சேர்த்தாச்சு, அதுக்காக லவ் பண்ணாம இருக்க முடியுமா? நைசா தன் பேர் கொண்ட வேலு பையனிடம் போய் என் லவ்வுக்கு ஏதாவது ஐடியா குடுடா வேலுன்னு பெரிய வேலு சின்ன வேலுவை உசுப்பி விடறான். பாட்டிக்கு தமிழ் அப்பா துரோகம் செய்துட்டார்னு தமிழை வீட்டை விட்டு வெளியில் அனுப்பிட்டாங்க.
கொரோனா பரிதாபங்கள் : முதல்ல உங்ககிட்ட இருந்து தான் ”கொரானாவை” காப்பாத்தனும்!
சின்ன வேலு பையன் இருக்கானே அவன் தமிழ் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவன். இந்த பையனை வச்சுத்தான் பெரிய வேலு தமிழிடம் காதலை சொல்ல அவ்வப்போது ட்ரை பண்ணி வந்துருக்கான். இப்போ பிரிவில் வேற இருக்காங்களா.. இந்த நேரம் பார்த்து வேலுவின் தங்கை நிச்சயதார்த்தத்துக்கு அனாதை குழந்தைகளுக்கு பள்ளி நடத்தி வரும் தமிழை கூப்பிட்டு மீந்து போன சாப்பாட்டை எடுத்து போகச் சொல்றான் வேலு. புருஷன் பேசலேன்ன என்ன, நமக்கு சாப்பாடுதான் முக்கியம்னு தமிழும் சாப்பாடு எடுத்துட்டு போக வருகிறாள்.
வேலுவின் சித்தி இருக்காங்களே தமிழை வீட்டை விட்டு மட்டும் இல்லை வேலுவின் வாழக்கையில் இருந்தே தூக்கி விடணும்னு நினைக்கறவங்க குழந்தைங்க சாப்பிடும் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்துட்டாங்க. சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழ துடிதுடித்துப் போகிறாள் தமிழ். வேலுவும் துடிச்சு போய்த்தான் பொண்டாட்டி கூடவே இருந்து குழந்தைங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டு போய் வைத்தியம் பார்த்து இப்போ இந்த சின்ன வேலு பய எழுந்து கூட உட்கார்ந்துட்டான்.
’நாயகி’ சீரியல் ஆனந்தி : ஆச்சர்யப்பட வைக்கும் மறுபக்கம்!
சின்ன வேலுக்கு பெரிய வேலு பிரியாணி வாங்கிக் குடுத்து, ஐஸ் கிரீம் வாங்கிக் குடுத்து லவ் டிப்ஸ் குடுடான்னு கேட்டா. டீச்சர் தமிழ் முறைச்ச ஒரு பார்வையில் பயபுள்ள வேலு அண்ணன் தான் மிஸ் எனக்கு எல்லாம் வாங்கிக் குடுத்து, லவ் டிப்ஸ் குடுக்க சொன்னாருன்னு காட்டிக் குடுத்துட்டான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"