’நாயகி’ சீரியல் ஆனந்தி : ஆச்சர்யப்பட வைக்கும் மறுபக்கம்!

பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் முடித்த வித்யா பிரதீப், பி.எச்.டி-யும் முடித்திருக்கிறார்.

Nayagi Serial Anandhi, Vidhya Pradeep
Nayagi Serial Anandhi, Vidhya Pradeep

Nayagi Serial Vidhya Pradeep : சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’நாயகி’ சீரியலில் ஆனந்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வித்யா பிரதீப். சீரியல் மட்டுமல்ல, சினிமா, விளம்பரம் என எல்லாவற்றிலும் பிஸியாக ஓடிக் கொண்டிருக்கிறார். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வித்யா சயிண்டிஸ்டும் கூட. ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம்…

ஹாய் கைய்ஸ் : துல்லிய ரிசல்ட் வேண்டுமெனில் காத்திருப்பதில் தவறில்லையே…

Vidya Pradeep, Nayagi serial Anandhi
வித்யா பிரதீப்

வித்யா கேரளாவில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். டி.வி, செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் பல்வேறு விளம்பரங்களில் மாடலாக பணியாற்றியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘ராவ்னாக்’ என்ற ஆல்பத்துக்கு இசையமைத்துள்ளார். அந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள “ஆ பி ஜா” என்ற மியூஸிக் வீடியோவில் நடிகை யமி கெளதம் உள்ளிட்ட மாடல்களுடன் வித்யாவும் இடம்பெற்றிருந்தார்.

மாடலிங் துறையில் பிஸியாக இருந்த வித்யாவை சினிமாவுக்கு அழைத்து வந்தது, இயக்குநர் ஏ.எல் விஜய் தான். அவர் இயக்கிய ‘சைவம்’ படத்தில், பேபி சாராவுக்கு அம்மாவாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார் வித்யா. ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடுத்தர வயது பெண்மணி போலத் தெரிய வேண்டும் என்ற இயக்குநரின் தேவைக்கு ஏற்ப, உடலை வெயிட் போடச் செய்திருக்கிறார். குடும்பப் பின்னணியில் அமைந்த அந்தப் படம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

‘புத்தன் பிறந்தான்’: பா.ரஞ்சித்- அனிதா ரஞ்சித் செம ஹேப்பி!

பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் முடித்த வித்யா பிரதீப், பி.எச்.டி-யும் முடித்திருக்கிறார். ஆராய்ச்சி விஞ்ஞானியாக, ஸ்டெம் செல் உயிரியலில் தற்போது அவர் பணிபுரிந்துக் கொண்டிருக்கிறார். வித்யாவின் பணி ”இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் செல் தெரபி”யில் வெளியிடப்பட்டுள்ளது! இப்படி கரியரையும், பேஸனையும் பேலன்ஸ் செய்யும் சீக்ரெட்டை மற்றவர்களும் வித்யாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sun tv nayagi serial anandhi vidhya pradeep lifestyle

Next Story
சீரியலுக்கு தான் பை, இன்ஸ்டாவுக்கு இல்ல : நீலிமா ராணியின் கலர் ஃபுல் படங்கள்!Neelima Rani Latest Photos, Aranmanaikili Serial
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com